செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முதியோர்களுக்கான செயலமர்வு





ந.குகதர்ஷன் -

செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முதியோர்களுக்கான செயலமர்வு நிகழ்வில் சேவகம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான மறுதாக்கம் குறும்படம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ள முதியோர்களுக்கான செயலமர்வில் மேற்படி குறும்படம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி சக்சஸ் விளையாட்டுக் கழகம், சேவகம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த மதனுகண்ணாவின் மறுதாக்கம் குறும்படத்தை சேவகம் நிறுவனத் தலைவர் எஸ்.நிலாந்தன் மற்றும் படக்குழுவினர்கள் இணைந்து வெளியீட்டு வைக்க அதனை செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் பெற்றுக் கொண்டதுடன், இரண்டாவது இருவெட்டினை ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர்; வெளியீட்டு வைக்க அதனை மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர்; பெற்றுக்கொண்டார்.

சக்சஸ் விளையாட்டுக் கழகம், சேவகம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த மேற்படி குறும்படத்திற்கு ஊடக அனுசரணையினை பற்றி நியூஸ் இணையத்தளம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வயதான பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விடுவதனால் எதிர்காலத்தில் நாம் முதியோராகும் போது எமது பிள்ளைகள் எம்மை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் என்ற செய்தியை தாங்கி மேற்படி குறும்படம் வெளிவந்துள்ளது.

மிகக் குறைந்த செலவில் எந்தவிதமான நவீன தொழில் நுட்பங்களும் இன்றி எமது பிரதேச கலைஞர்களை வைத்து தயாரிக்கப்பட்ட இக் குறும்படத்தின் வெளியீடு பிரதேச செயலாளரின் உதவியுடன், சேவகம் நிறுவனத்தினால் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேற்படி குறும்படத்தின் காட்சிகள் தரம் வாய்ந்தவையாக இல்லாவிட்டாலும், ஏறாவூர் பற்றில் இருந்து வெளிவந்த முதல் குறும்படம் என்றவகையில் ஏழ்மையான தாயாக இருந்தாலும் அது எமது தாய் என்ற வகையில் மிக எளிமையாக இப் படம் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அது எமது மண்ணின் படைப்பு என்ற வகையில் நாம் அனைவரும் இக் குறும்படக் குழுவினரை பாராட்டி பெருமையடைகின்றோம்.

இப்படம் சமூகத்திற்கு சிறந்த செய்தியை சொல்லியுள்ளது என்பதே உண்மை எதிர்காலத்தில் இதுபோன்ற படைப்புக்கள் மேற்படி படக்குழுவினரால் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இக் குறும்படத்தை வெளியிடுவதற்கு அனைத்து வகையிலும் உதவிய ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என சேவகம் நிறுவனத் தலைவர் எஸ்.நிலாந்தன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :