யெமன் தூதுவர் கலாநிதி கதீஜா றத்மன் தலைமையிலான குழு காத்தான்குடி விஜையம்-படங்கள்



பழுலுல்லாஹ் பர்ஹான்-



இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை , இந்தியா ,மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான யெமன் நாட்டின் தூதுவர் கலாநிதி கதீஜா றத்மன் முஹம்மட் கானம் தலைமையிலான குழு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் இன்று 11 -2 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு -காத்தான்குடி பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

விஷேட ஹெலிகொப்டர் விமானம் மூலம் மட்டக்களப்பு விமான நிலையத்தை வந்தடைந்த இத் தூதுக்குழுவை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

காத்தான்குடி விஜயம் மேற்கொண்ட யெமன் நாட்டு தூதுவர் கலாநிதி கதீஜா றத்மன் முஹம்மட் கானம் தலைமையிலான குழுவினரை காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் அஸ்பர் தலைமையிலான நகர உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்களினால் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து காத்தான்குடி நகர சபையில் யெமன் நாட்டு தூதுவர் கலாநிதி கதீஜா றத்மன் முஹம்மட் கானத்துக்கும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் நகர சபை முக்கியஸ்தர்கள் ஆகியோருக்கிடையில் விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில் எமன் நாட்டு முஸ்லிம்களுக்கும் காத்தான்குடி முஸ்லிம்களுக்குமிடையிலுள்ள பழக்க வழக்கங்கள் ,தொடர்புகள் மற்றும் யெமன் நாட்டு ஹதரல் மௌத் மாகாணத்துக்கும் காத்தான்குடிக்குமிடையில் உடன்படிக்கை செய்வதற்கான யோசனைகள் சம்மந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இதன் போது யெமன் நாட்டு தூதுவர் கலாநிதி கதீஜா றத்மன் முஹம்மட் கானத்துக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நகர சபைத் தவிசாளர் அஸ்பர் ஆகியோரினால் நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் , மட்டக்களப்பு ,காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபைகளின் தலைவரும்,காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.எம். அலியார் (பலாஹி),காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,பிரதித் தவிசாளர் ஜெஸீம் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல் மும்தாஸ் மதனி , பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொடர்பு அதிகாரி றுஸ்வின் ,நகர சபை செயலாளர் ஜெ.சர்வேஸ்வரன,; காத்தான்குடி நகர சபை அளும் கட்சி உறுப்பினர்களான பாக்கீர்,அலி சப்ரி உட்பட நகர சபை அதிகாரிகள் ,உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :