வவுனியா தெற்கு வலயத்தில் உள்ள பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் கடந்த சில வருடங்களாக விஞ்ஞானப் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை அப் பாடசாலை அதிபர் தனது விரும்பத்தைத் தெரிவித்து, இவ்வாறு தான் நீர் இனி கவர்ச்சியாக சாரிகட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அதனை குறித்த ஆசிரியர் பொருட்படுத்தாது வழமை போன்று அடக்க ஒடுக்கமாக சாரி கட்டிக் கொண்டு பாடசாலை வந்துள்ளார். அப்போது அதிபர் தனபாலசிங்கம் குறித்த ஆசிரியை அழைத்து கண்டபடி பேசியதுடன் அவருக்கு றான்சரையும் எழுதி கையில் கொடுத்திட்டார். தமது பாடசாலைக்கு குறித்த ஆசிரியர் தேவையில்லை என வலயத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து வலயத்திடம் குறித்த ஆசிரியர் முறையிட்ட போதும் பாடசாலையில் போய் றிலீஸ் கடிதம் எடுத்து வருமாறு அவர்கள் கூறியுள்ளனரே தவிர குறித்த அதிபருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆசிரியர் றிலீஸ் கடிதம் எடுக்கச் சென்ற போது குறித்த ஆசிரியரை காலைக் கூட்டத்தின் முன்னிறுத்தி இவ் ஆசிரியர் வேணுமா? வேணாமா? என மாணவர்களிடம் மிரட்டும் தொனியில் கேட்டுள்ளதுடன், வேணும் என்ற மாணவர்களை மறுபக்கம் வருமாறும் பணித்துள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவர்கள் அமைதியாக நின்றுள்ளனர். இதன் பின் குறித்த ஆசிரியருடைய றீலிஸ் கடிதமும் கொடுக்கப்பட்டு அவ் ஆசிரியர் வேறு ஒரு சிறிய பாடசாலையில் கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.
இவருடைய செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாமல் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளரே பயப்படுவதாக அத்திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அரசியல் செல்வாக்கை வைத்துக் கொண்டு ஆட்டம் போடும் இவ் அதிபர் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்தும் வலயம் கண்டும் காணாமல் இருப்பது வேதனையளிப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.themurasu
0 comments :
Post a Comment