தமிழ் பேசும் சிறுபாண்மை மக்கள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் - அபார்

எஸ்.அஷ்ரப்கான்-

மிழ் பேசும் சிறுபாண்மை இன மக்கள் இம்முறை மேல்மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க முன்வர வேண்டும் என்று அம்பாரை மாவட்ட அரசியல் அவதானிகள் அமைப்பின் தலைவர் யு.எல்.எம். அபார் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக அவ்வமைப்பின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்கள் மிக நீண்டகாலமாக பல இன்னல்களை அனுபவித்து வந்தார்கள். இவர்களுக்கான நிரந்தரத்தீர்வை பெறும் பொருட்டு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஓங்கி ஒலித்த குரலாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தற்போதும் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றார்.

தேசிய சர்வதேச ரீதியில் மக்களின் தேவைகளை கொண்டுசென்று தீர்வு பெற்றுத்தர அமைச்சர் றிஷாட் எடுக்கும் முயற்சிகள் செயற்பாடுகளுக்கு சிறுபான்மை மக்கள் அனைவரும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். வடக்கின் மீள் குடியேற்றம், கிராமங்களின் அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு, முஸ்லிம் சமூகத்தின் இருப்பு போன்ற விடயங்களினை சிறப்பாக எதிர்கொண்டு மக்கள் சேவகனாக செயற்படும் ஒரு தலைவர் என்ற ரீதியில் இவரது கைகளைப் பலப்படுத்த வேண்டிய தேவை சிறுபான்மை மக்களுக்கு உள்ளது.

இக்கட்சியின் செயரலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் மிகச்சிறப்பாக செயற்பட்டு வருகின்றார். மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் அரசியல் பாசறையில் வளர்ந்தவர் என்றவகையில் சிறப்பாக அமைச்சர் றிஷாட் பதியுதீனுடன் இணைந்து கட்சி முன்னெடுப்புக்களை செயற்படுத்தி வருகின்றார்.

இன்று பல கட்சிகள் போலிப்பிரச்சாரங்களை மேற்கொண்டு தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு முனைந்துவரும் காலகட்டத்தில் சிறுபான்மை மக்களுக்காக குரல்கொடுத்துவரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க முன்வரவேண்டும். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் விருப்பவெறுப்புகளை உணர்ந்து செயற்படும் ஒரேயொரு கட்சி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாகும்.

எனவே, எமது அபிவிருத்தி, உரிமைகளையும் பெற்றிட இம்முறை மேல்மாகாண சபை தேர்தலில் சிறுபான்மை மக்கள் நன்கு சிந்தித்து தமது வாக்குகளை பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :