சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் காத்தான்குடியில் புதிய பள்ளிவாயல் திறப்பு - படங்கள்


பழுலுல்லாஹ் பர்ஹான்-

ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தினால் சவூதி அரேபிய நிதாஉல் கைர் சர்வதேச இஸ்லாமிய அமைப்பின் சுமார் 45 இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் மட்டக்களப்பு – கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் இருந்து மிக அருகாமையிலுள்ள சரீப் புறக்கடர் வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுல் ஹிதாயா எனும் புதிய பள்ளிவாயல் நேற்று 9 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அஷர் தொழுகையுடன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது இப் பள்ளிவாயளின் நினைவுக் கல்லை சவூதி அரேபிய பேராசிரியர் அஷ்ஷேய்க் ஹூஸைன் அல் குறைஷ் மற்றும் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் திரை நீக்கம் செய்து வைத்தனர்.

இங்கு பள்ளிவாயல்களின் முக்கியத்துவம் தொடர்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய கற்கை பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷெய்க் எம் அலியார் றியாதியினால் விஷேட மார்க்க சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது.

காத்தான்குடி- மஃஹதுஸ்ஸூன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷேய்க் செய்னுலாப்தீன் (மதனி) தலைமையில் இடம்பெற்ற இப் பள்ளிவாயல் திறப்பு விழாவில் சவூதி அரேபிய பேராசிரியர் அஷ்ஷேய்க் ஹூஸைன் அல் குறைஷ் , ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேன் நிறுவனத்தனின் பணிப்பாளரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சவுதி அரேபிய நிதாஉல் கைர் அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அபூ ஸாலிஹ் ஹாலித் அத்தாவூத்,சவூதி அரேபியாவின் சர்வதேச மனித மனிதவளங்களுக்கு பொறுப்பான அமைப்பின் தலைவர் கலாநிதி ஹமீட் அப்துல் றகுமான் அல் ஜப்பார், உதவிப் பேராசிரியர் பொறியியலாளர் அப்துல் மலீக், மட்டக்களப்பு ,காத்தான்கு ஜம்மியதுல் உலமா சபைகளின் தலைவரும்,காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.எம். அலியார் (பலாஹி), மஃஹதுஸ்ஸூன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரி பிரதி அதிபர் அஷ்ஷேய்க் மன்சூர் (மதனி),ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல் மும்தாஸ் மதனி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் றவூப் ஏ மஜிட் ,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் ,மற்றும் உலமாக்கள் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :