வெளிநாட்டு கல்விப்பிரதிநிதிகள் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்துக்கு விஜயம்






எம்.வை.அமீர்-

யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் அண்மையில் இலங்கைக்கு
விஜயம் செய்த வங்காளதேஷ் அரசின் உயர்மட்டக் குழுவினர் யுத்தத்துக்கு
பின்னரான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி மற்றும்
முன்னேற்றம் தொடர்பாக ஆராய்ந்து இங்கு எட்டப்பட்ட சிறந்த முன்னெடுப்புகளை வங்களாதேசில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு கையாண்டு அந்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வரிசையில் கல்வி நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக இம்முறை அம்பாறை மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடத்தை பெற்ற மாணவன் கல்விகற்ற பாடசாலையான சம்மாந்துறை கல்வி கோட்டத்தில் அமைந்துள்ள பாடசாலையான முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்துக்கும் இன்று (2014.02.13) வருகை தந்து ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இலங்கையில் காணப்படுகின்ற பிள்ளை நேயப் பாடசாலைகளின் நடவடிக்கைகளை யுனிசெப் என்ற நிறுவனேமே முன்னெடுத்துச் செல்கின்றது.

இந்த வகையில் சம்மாந்துறையில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் நேயப் பாடசாலைகளின் சிறப்பான செயற்பாடுகளை அறிந்து கொள்வதற்கான சார்க்
அங்கத்துவ நாடான வங்காளதேஷ் அரசின் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் அதனோடு இணைந்த உயர் அதிகாரிகளும் இந்த துதுக்குழுவில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்படி பிரதிநிதிகள் கலாநிதி எஸ்.எல்.எம். றியாஸின் வழிகாட்டலின் ஊடாக எமது பாடசாலைக்கு சமூகமளித்தது இங்கு காணப்படுகின்ற பல்வேறு சிறப்பம்சங்கள் தொடர்பாக அதன் பிரதி அதிபர் ஏ.எம். தாஹா நழீமிடம் கேட்டு விளங்கிக் கொண்டார்கள்.

இது போல் வெளிநாட்டு பிரதிநிதிகள் கடந்த ஆண்டுகளிலும் இப்பாடசாலைக்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :