ஆணுக்கு பெண் சமம் என்பதை வலியுறுத்தி மணமகன் கழுத்தில் தாலி கட்டிய மணமகள்



திருவாரூர் அருகே உள்ள நீடாமங்கலத்தில் ஆணுக்கு பெண் சமம் என்பதை வலியுறுத்தி நடந்த திருமணத்தில் மணமகள், மணமகனுக்கு தாலி கட்டினார்.

திருமணங்களில் மங்கல நாண் என்று அழைக்கப்படும் தாலியை மணமகன் மணமகளின் கழுத்தில் கட்டுவது தான் வழக்கம். ஆனால் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நடந்த திருமணத்தில் மணமகள், மணமகனுக்கு தாலி கட்டினார்.

நீடாமங்கலம் காட்டி நாயக்கன்தெருவை சேர்ந்தவர் சோமு. இவரது மனைவி கல்யாணி. இவர்களுடைய மகள் வசந்திக்கு, திருச்சி மாவட்டம் திருவரங்கம் பகுதியை சேர்ந்த பழனிநாயக்கன், திலகவதி ஆகியோரின் மகன் சதீசுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்த திருமணம் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் திருமண மண்டபத்தில் கூடி இருந்தனர். நிகழ்ச்சியில் முதலில் மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றி கொண்டனர். அதைத்தொடர்ந்து மணமகன் சதீஷ், மணமகள் வசந்தி கழுத்தில் தாலி கட்டினார்.

மணமகன் கழுத்தில் மணமகள் தாலி கட்டியதால் மண்டபத்தில் இருந்த உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது ஆணுக்கு, பெண் சமம் என்பதை வலியுறுத்துவதற்காக மணமகன் கழுத்தில் மணமகள் தாலி கட்டியதாக மணமக்களின் பெற்றோர் தெரிவித்தனர்.

இந்த புதுமை திருமண நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நேதாஜி, திருவாரூர் மாவட்ட செயலாளர் வீரசேனன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :