கல்முனை நீதி நிருவாகத்திற்கான சமாதான நீதவானாக சத்தியபிரமானம்

ஏ.சி.றிசாத்-
நூரானியா வீதி, மருதமுனையை சேர்ந்த அப்துல் கபூர் ஜாபிர் கல்முனை நீதி நிருவாகத்திற்கான சமாதான நீதவானாக (28.01.2014) அண்மையில் கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பீ.முகைதீன் முன்னிலையில் சத்தியபிரமானம் செய்து கொண்டார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித் தி;ட்டத்தில் இரண்டாம் நிலை (சாரதி) ஊழியராக கடமையாற்றிவரும் இவர் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவருமாவார். பொதுச்சேவைகள், சமூக சேவைகளில் மிகுந்த ஆர்வமிக்கவராக செயற்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இவர் முன்னாள் பிரபல வர்த்தகரும் மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர் அல்-ஹாஜ் எம்.எம்.ஏ.கபூர் மரைக்கார், உம்மு ஹப்ஸா ஆகியோரின் சிரேஸ்ட புதல்வருமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :