எம்.பைஷல் இஸ்மாயில்-
இம்போட் மிரர் இணையத்தளம் வழங்கும் முழுமதி இரவு இன்று (14) மாலை 6.30 மணிக்கு ஒலுவில் துறைமுகத்துக்கு முன்னால் அமைந்துள்ள இம்போட் மிரர் வளாகத்தில் இடம்பெறவுள்ளன.
இணையத்தள பணிப்பாளர் நாயகமும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், எம்.ஏ .ஜெமீல், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்ஸீல் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.தாஹீர் அஷ்ரப், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள். மற்றும் இம்போட் மிரர் இணையத்தள ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த முழுமதி நிகழ்வில் இம்போட் மிரர் ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கலும் கருத்துப் பரிமாரல்களும் மற்றும் ஊடக அனுபவங்கள் பற்றியும் பேசப்பட இருப்பதுடன் ஊடகவியலாளர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வின் இறுதி அம்சமாக கடந்த வருடம் இம்போட் மிரர் இணையத்தளத்துக்கு செய்திகள் அனுப்பிவைத்த ஊடகவியலாளர்களின் செய்திகளில் அதிகப்படியாக மக்களினால் பார்க்கப்பட்ட செய்திகள் என்ற அடிப்படையில் முதல் மூன்று இடங்களை பிடித்த செய்திக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

0 comments :
Post a Comment