சுனில்-
உலகெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினத்தையொட்டி இராணுவப் படையின் சமிக்ஞை படைப்பிரிவு வித்தியாசமான காதல் பரிசொன்றை அங்கவீனமுற்ற படைவீரரொருவருக்கு வழங்கத் தீர்மானித்துள்ளது.
2008 ஜுலை 25 ஆம் திகதி மாங்குளம் பகுதியிலுள்ள புலிகளின் பங்கரொன்றை கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது நளின் குமார எனும் இராணுவ வீரர் காயமடைந்ததோடு இவரின் கண்பார்வையும் பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு ஒன்றரை மாதத்துக்கு முன்னர் நளின் குமாரவுக்கு பெண் ஒருவருடன் காதல் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நேரில் காணாமல் தொலைபேசியிலே காதல் செய்துள்ளனர்.
இருவருக்கும் நேரில் சந்திக்க அவகாசம் கிடைக்கவில்லை. யுத்தத்தினால் தன் பார்வையை இழந்து அங்கவீனமுற்ற போதும் அவரின் காதலி அவரை கைவிடவில்லை.
இருவரும் திருமணம் செய்துகொண்டதோடு இவர்கள் நளினின் சிறிய வீட்டிலே வாழ்ந்து வந்தனர். இது குறித்து அறிந்த இராணுவ சமிக்ஞை படைப் பிரிவு தளபதி ஜெனரல் அபேசேகர இவர்களுக்கு தலாவ பகுதியில் வீடொன்றை கட்டியுள்ளதோடு காதலர் தினமான இன்று அதனை கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment