பியகம தெல்கொட பிரதேசத்தில் நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனித உரிமைகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி. பியும், அரசசார்பற்ற நிறுவனங்களும், சர்வதேசமும் பேசி வருகின்றன. ரணிலின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் சென்றால் என்ன நடக்கும் என்பதை பியகம மக்களிடம் கேட்கவேண்டும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு உதவிய யுவதிகளை தாய்மார் எவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியில் அன்று வீட்டில் வைத்து பாதுகாத்தனர். எத்தனை யுவதிகளை கொண்டு சென்றனர்.
அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களை உயிருடன் வைத்து அவர்களின் நகங்களை பிடிங்கினர். கண்களை பிடிங்கினர். காய்ச்சிய இரும்பு கம்பினால் சுட்டனர். பிக்குமாரை தர்ம சக்கத்தில் தெங்க விட்டு சித்திரவதை செய்து பழிவாங்கினர்.
பட்டலந்த சித்திரவதை முகாமில் இந்த சித்திரவதைகளை பார்த்து ரணில் மகிழ்ந்தது எமக்கு நினைவில் உள்ளது. அப்போது அவருக்கு புதினமாக ஆசை இருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளை சித்திரவதை செய்து கொலை செய்ததது. எம்பிலிப்பிட்டி பாடசாலையின் மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக நிலைப்பாடுகளை கொண்டிருப்பதாக கூறி, அவர்களை கைதுசெய்து சித்திரவதை செய்து கொலை செய்த பின்னர் சூரியகந்த பிரதேசத்தில் புதைத்தனர் என்றார்.

0 comments :
Post a Comment