-ஏ.ஜி.ஏ.கபூர்-
அண்மையில் (01.02.2014) வபாத்தான உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின இணைப்புச் செயலாளரும், ஓய்வு பெற்ற காணி உத்தியோகத்தரும், சமுக சேவையாளருமான தேசகீர்த்தி கலாபூஷணம் மர்ஹும் ஏ.பி.தாவூத் ஜே.பி அவர்களுக்கான கத்தமுல் குர்ஆன் பாராயணம்ஃ தமாம் செய்யும் நிகழ்வொன்று அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாயலில் நேற்று (13.02.2014) வியாழக்கிழமை நடைபெற்றது.
அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளி சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் கலந்து கொண்டதோடு, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன, வீடமைப்பு நிர்மான, கிராமிய மின்சார நீர் வழங்கள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை,மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி, பிரதி மேயர் எம்.எம்.எம்.றிஸாம்,மாநகர ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி, மா நகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அமைச்சர் அதாஉல்லா அவர்களின் பொதுசனத் தொடர்பு உத்தியோகத்தர் எஸ்.எம்.ஸபீஸ், சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ். மாகாண அமைச்சர்உதுமாலெவ்வையின் இணைப்பாளர் யூ.எல்.உவைஸ், அனைத்துப் பள்ளி சம்மேளனத்தின் தலைவர் அல்-ஹாஜ் எம்.ஏ.றஸீத், அதன் செயலாளரும், வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவிச் செயலாளருமான எம்.ஐ.சலாகுதீன், அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளி செயலாளர் அல்-ஹாஜ் எம்.பி;ஏ.ஹமீட்,மற்றும் பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள், அனைத்துப் பள்ளி சம்மேளத்தின் பொருளாளர் உட்பட உறுப்பினர்கள்,கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஐ.ஏ.கபூர்.பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் தேசகீர்த்தி கலாபூஷணம் மர்ஹும் ஏ.பி.தாவூத் ஜே.பி அவர்களின் குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மௌலவி எம்.ஏ.எம் ஆப்தீன், மௌலவி ஏ.எல்.அஸ்ரப், மௌலவி எம்.அப்துல் குத்தூஸ், மௌலவி எம்.ஏ.உதுமா லெவ்வை உட்பட பல மௌலவிகளுடன்; அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளி வாயல் மத்ரசா மாணவர்களும் இணைந்து குர்ஆன் பாராயணம் செய்து தமாம் செய்ததோடு மர்ஹும் ஏ.பி.தாவூத் ஜே.பி அவர்களுக்காக துஅப் பிரார்த்தனையும் இடம் பெற்றது.
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் சிறப்புரை நிகழ்த்தியபோது கலாபூஷணம் மர்ஹும் ஏ.பி.தாவூத் ஜே.பி அவர்களின் நற்பண்புகளைப் பற்றியும். சமுகத்திற்காகவும், மக்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்து சிறந்த சேவையாற்றியவர் மர்ஹும் ஏ.பி.தாவூத் ஜே.பி. பல்வேறு ஆளுமைகளுடன் தனித்துவமாக விளங்கிய அன்னாரின் நற்பண்புகளை நாம் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். என்று அவரிpன் மக்கள் சேவைபற்றியும் எடுத்துக் கூறியதோடு அவருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஜென்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கலோகத்தைக் கொடுக்க வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்தார்.
இறுதியாக அனைத்துப் பள்ளி சம்மேளனத்தின்; செயலாளரும், வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவிச் செயலாளருமான எம்.ஐ.சலாகுதீன் அவர்கள் நன்றி உரை வழங்கினார்கள்.
0 comments :
Post a Comment