கல்முனை மாநகரசபையில் பணிபுரிந்த சில ஊழியர்கள் நிரந்தர நியமனம் பெறுவர் - நிசாம்



-எம்.வை.அமீர், எஸ்.எல்.அப்துல் அஸீஸ்-

ல்முனை மாநகர சபையின் இம்மாதத்துக்கான சபை அமர்வு இன்று (2014-02-11) இடம்பெற்றது. இன்றைய சபை அமைவின்போது முதல்வர் நிசாம் காரியப்பர் விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக, நீண்ட காலமாக நிரந்தரமாக்கப்படாமல் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தற்காலிக அடிப்படை ஊழியர்களின் நிரந்தர நியமனம் சம்மந்தமான அறிக்கை ஒன்றை சபைக்கு தெரியப்படுத்தினார்.

இதன்போது கடந்த காலங்களில் கல்முனை முதல்வர்களாக செயட்பட்டவர்களின் முயற்சியை தொடர்ந்து தானும் எடுத்துக்கொண்ட பாரிய முயற்சியின் ஊடாகவும் மாகாண சபையின் சம்மந்தப்பட்ட செயலாளர்களின் ஒத்துழைப்புடனும் இந்த நியமனங்களைப்பெற முடிந்ததாகவும் அதில் சுகாதார ஊழியர்கள் 28 பேரும் களவேலையாட்கள் 8 பேரும் வெல்டர் ஒருவரும் பார இயந்திர இயக்குனர் ஒருவரும் கவலாளிக்களும் மற்றும் கடமையாற்றும் அனைத்து சாரதிகளுமாக ஐம்பதுக்கு மேற்பட்டோர் நிரந்தர நியமனங்களைப் பெற உள்ளதாக தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :