இயக்குநர் பாலுமகேந்திரா உடல்நலக் குறைவால் காலமானார்

இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.  1946 மே மாதம் 19ம் திகதி இலங்கையின் மட்டக்களப்பு - அமிர்தகழியில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. 

லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்த அவர். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்றார். 

அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை ´செம்மீன்´ படப்புகழ் ராமு காரியத் அவரது ´நெல்லு´ படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார்.  அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கான கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். 

பின் 1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான ´கோகிலா´வை கன்னட மொழியில் இயக்கினார்.  தொடர்ந்து ´மூன்றாம் பிறை’, ´அழியாத கோலங்கள்´, ´வீடு´, ´சந்தியா ராகம்´, ´மறுபடியும்´, ’சதி லீலாவதி’ என தமிழ் சினிமா இரசிகர்களால் மறக்க முடியாத பல படங்களை இயக்கினார். 

அத்துடன் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சிறந்த படங்களை வழங்கியவர் பாலு மகேந்திரா.  சமீபத்தில் இவர் இயக்கத்தில் ´தலைமுறைகள்´ என்ற படம் வெளியாகி, விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்தநிலையில் இன்று காலை பாலு மகேந்திராவிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை விஜயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் காலமானார். 

சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த படம் என ஐந்து முறை தேசிய விருது வென்றவர் பாலு மகேந்திரா. தேசிய விருது மட்டுமன்றி கேரளா மற்றும் கர்நாடக மாநில அரசுகளின் விருதுகளையும் வென்றிருக்கிறார். 

இயக்குநர் பாலா, ராம், வெற்றிமாறன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் இவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாலு மகேந்திரா மறைவிற்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 

பாலுமகேந்திரா இயக்கிய படங்கள் : 

கோகிலா 
அழியாத கோலங்கள் 
மூடுபனி 
மஞ்சு மூடல் மஞ்சு 
ஓலங்கள் 
நீரக்ஷ்னா 
சத்மா 
ஊமை குயில் 
மூன்றாம் பிறை 
நீங்கள் கேட்டவை 
உன் கண்ணில் நீர் வழிந்தால் 
யாத்ரா 
ரெண்டு தொகல திட்ட 
இரட்டை வால் குருவி 
வீடு 
சந்தியாராகம் 
வண்ண வண்ண பூக்கள் 
பூந்தேன் அருவி சுவன்னு 
சக்ர வியூகம் 
மறுபடியும் 
சதிலீலாவதி 
அவுர் ஏக் ப்ரேம் கஹானி 
ராமன் அப்துல்லா 
ஜூலி கணபதி 
அது ஒரு கனாக்காலம் 
தலைமுறைகள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :