சிங் பதவியில் இருந்தாலும் மோடி பிரதமர் பதவிக்கு வந்தாலும் எமக்கு பிரச்சினையில்லை - ராவணா சக்தி




ந்தியாவின் பிரதமராக மன்மோகன்சிங் பதவியில் இருந்தாலும் மோடி பிரதமர் பதவிக்கு வந்தாலும் எமக்கு பிரச்சினையில்லை. அவர்களுக்காக இலங்கை­யின் கொள்கைகளை மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை. அடிபணியத் தேவையும் இல்லை என்கிறார் 'ராவணா சக்தி' அமைப்பின் தலைவர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர்.

ஜெனீவா விடயத்தை கையாள முடியா விட்டால் அமைச்சர் பீரிஸ் பதவி விலக வேண்டுமென்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இறைமையுள்ள நாடு

இந்தியா எமது அண்டை நாடு என்பதால் அதனோடு நட்புறவை பேணி வருகின்றோம்.

ஆனால் இந்தியாவுக்கு அடிபணிய வேண்டிய தேவை எமக்கு கிடையாது.

அந்நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங்கிற்காகவோ அல்லது எதிர்காலத்தில் மோடி பிரதமராக பதவிக்கு வந்தாலோ எமக்கு பிரச்சினையில்லை.

அவர்களுக்காக இலங்கையின் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவையும் கிடையாது.

எமது நாட்டுக்கு ஏற்றவாறே எமது கொள்கைகள் வகுக்கப்படும்.

ஜீ.எல்.

இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் ராஜதந்திர அறிவில்லாத அரசியலிலும், அரச சேவையிலும் ஓய்வு பெற்றவர்களாகவே உள்ளனர்.

இவர்கள் நாட்டுக்காக எதனையும் செய்வதில்லை. ஜெனீவா பிரச்சினை தொடர்பாகவும், ஆக்கபூர்வமான எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுத்ததில்லை.

மாறாக தமது பிள்ளைகளை வெளிநாட்டு பாடசா­லைகளில் சேர்த்து விட்டு குடித்து கும்மாளம் அடித்து சுகபோகமாக வாழ்கின்றனர்.

எனவே, இவ்வாறானவர்களை தூதுவர் பதவியிலிருந்து வெளியேற்ற வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேரா­சிரியர் ஜீ.எல்.பீரிஸ் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் எதனையும் இதுவரையில் மேற்கொண்டதில்லை.

ஜனாதிபதியே இப் பதவிகளை வழங்கியிருக்கின்றார் என்றால் அப் பதவிகளில் உள்ளோரின் பலவீனங்களை ஜனாதிபதிக்கு தெரிவித்து பிரச்சினைக்கு முடிவு கட்டி­யிருக்க வேண்டும்.

ஆனால் அமைச்சர் பீரிஸ் இதனையும் செய்யவில்லை.

அன்றாடம் ஏதோவொரு நாட்டுக்கு விஜயத்தை மேற்கொள்கின்றார். எத்தனை பயணங்களை மேற்கொ­ண்டா­லும் ஜெனீவா பிரச்சினைக்கு முகம்கொடுத்து வெற்றிபெறும் எதுவும் நடக்கவில்லை.

எனவே வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக பீரிஸ் பதவி வகிப்பதில் எதுவிதமான பிரயோசனமும் இல்லை.

இவ்வாறு தொடர்ந்து பதவியில் தொற்றிக்கொண்டி­ருக்காமல் ராஜினாமா செய்து வெளியேற வேண்டும் என்றும் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :