அமைச்சர் குணரத்ன நேரில் சென்று மீள்குடியேற்றங்களை ஆரம்பித்து வைத்தார் - படங்கள்





ந. குகதர்சன்-
ட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு எல்லையான புணானையில் மீள்குடியேற்றத்திற்குபுறம்பாக வெளி மாவட்டத்தை சேர்ந்த சிங்கள குடும்பங்களும் திட்டமிட்டு குடியேற்றப்படுவதாகதமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்றது.

மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் அந்த பகுதிக்கு நேரில் சென்றுமீள்குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்திருந்தார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் தமது அமைச்சினால் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்றபணிகளுக்கு இராணுவம் வழங்கி வரும் உதவிகள் பலமாக அமைவதாக குறிப்பிட்டிருந்தார்.

மீள்குடியேற அடையாளம் காணப்பட்டவர்களுக்கு அமைச்சர் குணரத்ன வீரக்கோன் மற்றும்துணை அமைச்சர் கருணா உதவிப் பொருட்களை வழங்யிருந்தனர்.

வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகளில் இராணுவம் ஈடபட்டு வரும் நிலையில்,அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியேறக் கோருவது நியாயமற்றது என்றும் அவர்தெரிவித்திருந்தார்.

ஆனால் புணானையில் ஏற்கனவே வாழ்ந்துவந்த தமிழ்க் குடும்பங்களை மீள்குடியேற்றுவதைவிடுத்து சிங்கள மக்களை அங்கு புதிதாக குடியேற்ற முயற்சிகள் நடந்து வருவதாக தமிழ் தேசியகூட்டமைப்பு பொன். செல்வராசா தெரிவிக்கிறார்.

இதனிடையே, புணானையில் மீள்குடியேற்றத்திற்கு திரும்பியுள்ள தமிழ் குடும்பங்களை பிபிசிதமிழோசைக்காக எமது செய்தியாளர் இரா. உதயகுமார் சந்தித்தபோது, தாங்கள் சொந்தகிராமத்திற்கு திரும்பினாலும் தமது காணிகளில் இராணுவ முகாம் அமைந்துள்ளதால், சொந்தகாணியில் குடியிருக்கும் வாய்ப்பு தமக்கு கிடைக்கவில்லை என சில தமிழ் குடும்பங்கள்கவலையும் விசனமும் வெளியிட்டன.

மீள்குடியேற்றம் என கூறி தாங்கள் அழைக்கப்பட்டாலும் அங்குள்ள கள நிலவரத்தைஅவதானிக்கும்போது, மீள்குடியேற்றத்தை தடுப்பதற்கான மறைமுக செயல்பாடுகளே அங்குதென்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

புனாணையில் பல காலமாக இருந்துவருகின்ற பிள்ளையார் கோயிலின் அருகில் மிகஅண்மையில் பௌத்த விகாரை ஒன்று அவசரமாக கட்டப்பட்டுள்ளது என்றும் அவர்கள்சுட்டிக்காட்டுகின்றனர்.

மீள்குடியேற்றத்திற்கு தெரிவான குடும்பங்களுக்கு தற்போது காணிகள் அடையாளமிடப்பட்டுபிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டாலும், இராணுவம் மற்றும் பௌத்த பிக்குகள் தலையீடுகாரணமாக பொருத்தமான காணிகளை வழங்குவதில் சிங்கள குடும்பங்களுக்கே முன்னுரிமைவழங்கப்படுவதாக தமிழ்க் குடும்பங்களினால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

பெருன்பான்மையான தமிழ் குடும்பங்களுடன் ஒரு சில சிங்கள குடும்பங்களும் போருக்குமுன்னர் வாழ்ந்ததாக கூறப்படும் புணானையில் தமிழர்களை விட சிங்களவர்களே கூடுதலாகவாழ்ந்ததாக கூறியே வெளி மாவட்டத்தவர்கள் குடியேற்றப்பட்டு தமிழ் குடும்பங்கள்தெரிவித்துள்ளன.
ஆனால் இராணுவத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், ஏன்இப்படியான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது என்பது குறித்தும் இராணுவம் ஆராயும் எனவும்அதன் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அங்கு பல்சமய மக்களும் ஒன்றாக இணக்கப்பாட்டுடன் வாழ்வதற்கான உதவிகளைஇராணுவமே முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :