கொழும்பு ஸாஹிராக் கல்லூரி உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியி்ல் சம்பியன் - படங்கள்




எஸ்.எம்.அறூஸ்-



லிஸபெத் மூர் சுப்பர் 8 உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி உதைபந்தாட்ட அணி சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துள்ளது.

பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் இலங்கையின் தலை சிறந்த எட்டு பாடசாலை அணிகள் கலந்து கொண்டன. இதில் நான்கு அரசாங்க பாடசாலைகளும், நான்கு சர்வதேச பாடசாலைகளும் அடங்கும்.ஸாஹிராக் கல்லூரி, சென்.தோமஸ் கல்லூரி, சென்.ஜோசப் கல்லூரி, லும்பினி மற்றும் எலிஸபெத் மூர், லைசியம், றோயல் இன்ஸ்டிடியுட், கொழும்பு இன்ஸ்டிடியுட் ஆகிய கல்லூரி பாடசாலைகளாகும்.

இறுதிப் போட்டியில் கொழும்பு ஸராஹிராக் கல்லூரியும்,றோயல் இன்ஸ்டிடியுட் கல்லூரியும் கலந்து கொண்டன. இதி்ல் ஸராஹிராக் கல்லூரி 2 -1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸாஹிரா சார்பாக அணித்தலைவர் ஹூமைத்
மற்றும் எம்.சாபிர் ஆகியோர் கோல்களை அடித்தனர்.

தொடரின் சிறந்த வீரராக 11 கோல்களை அடித்த எம்.சாபிர் தெரிவு செய்யப்பட்டார்.

ஸாஹிராக் கல்லூரி உதைபந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் ஏ.றூமி, உதவிப் பயிற்றுவிப்பாளர் இஜாஸ் மற்றும் உதைபந்தாட்ட அணியின் பொறுப்பாசிரியர் ஏ.ஆர்.எம். அஹ்னப் கான் ஆகியோரும் வெற்றி அணியுடன் இணைந்திருந்தனர்.

ஸாஹிராக் கல்லூரி முதல் சுற்றுக்களில் பின்வரும் பாடசாலைகளுக்கெதிராக பங்குபற்றி வெற்றி பெற்றது. அதன் விபரம், லைசியம் கல்லூரிக்கெதிராக 8 -0 கோல் அடிப்படையிலும், எலிஸபெத் மூர் கல்லூரிக்கெதிராக 3 -1 அடிப்படையிலும், சென்.தோமஸ் கல்லூரிக்கெதிராக 11 -1 என்ற வித்தியாசத்திலும், சென்.ஜோசப் கல்லூரிக்கெதிராக 9 -0 கோல் அடிப்படையிலும் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கொழும்பு ஸாஹிராக் கல்லூரி உதைபந்தாட்டத்துறையில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வரும் ஒரு முஸ்லிம் முதன்மைக் கல்லூரியாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :