கதீர் எழுதிய 'மணல் நதி வெளியீடு விழா


ல்முனை 'அநுசரி இலக்கிய வட்டத்தின்' ஏற்பாட்டில் கதீர் எழுதிய 'மணல் நதி' கவிதை தொகுதி வெளியீடு நாளை 14 வெள்ளிக்கிழமை அந்தி 4.00 மணிக்கு தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தலைமையில் கல்முனை சபா வரவேற்பு மண்படத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் எஸ்.எல்.எம். ஹனீபா, மன்சூர் ஏ.காதிர், எஸ். கருணாகரன், மு.மு.மு. பாசில், மு. நபீல், ஏ.பீ.எம். இத்ரீஸ், எஸ்.றமேஸ், றியாஸ் குரானா, ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்,முஹம்மத் றனூஸ் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

இந்நிகழ்வுக்கு ஆய்வாளர்கள், இலக்கிய படைப்பாளர்கள், வாசகர்கள் சமூக நலன்விரும்பிகள் என பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இத்தொகுதி ஏற்கனவே இந்தியவில் உள்ள முன்னணி வெளியீட்டகங்களில் ஒன்றான கருப்புப் பிரதிகள் வெளியீட்டகத்தினால் வெளியீடு செய்துவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கல்முனையில் நாளை வெளியீடு செய்து வைக்கப்படவுள்ளது.

இத்தொகுதி இலக்கியத்துறை சார்ந்த முக்கியமான வரவாகப் பார்க்கப் பட்டுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 
 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :