திடீரென ஏற்பட்ட புதைகுழிக்குள் புதைந்தன கார்கள் - வீடியோ

அமெரிக்காவின் பௌலிங் க்ரீனில் உள்ள கொர்வெட் தேசிய அருங்காட்சியகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 கார்கள், திடீரென ஏற்பட்ட புதைகுழிக்குள் புதைந்துள்ளன.

40 அடி அகலமும் 20 அடி ஆழமுமான புதைகுழிக்குள் இந்தக் கார்கள் அமிழ்ந்ததன் காரணமாக மில்லியன் கணக்கான டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கொர்வெட் தேசிய அருங்காட்சியக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த, குறித்த அருங்காட்சியகத்தின் பேச்சாளர் ஒருவர், இந்த சம்பவம் அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றதாகவும், உடனே தான் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை உதவிக்கு அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தொலைதூரக் கட்டுப்பாட்டு ஆளில்லா விமானத்தின் உதவியுடன் அருகிலுள்ள கெந்துக்கி பல்கலைக்கழக ஆய்வாளர்களும் தொழில்நுட்பவியலாளர்களும் மேற்கொண்ட ஆய்வில், கட்டடக் கட்டமைப்பில் எவ்விதக் கோளாறுகளும் இருந்திருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

பாதிப்பிற்குள்ளான பகுதி மட்டும் மூடப்பட்டுள்ள நிலையில், அருங்காட்சியகத்தின் ஏனைய பகுதிகளின் செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெற்று வருவதாக தேசிய அருங்காட்சிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதைகுழிக்குள் அமிழ்ந்த 8 கார்களில் 6 கார்கள் கொர்வெட் தேசிய அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டவை எனவும் ஏனைய இரண்டு கார்களும் ஜெனரல் மோட்டார் கார் தயாரிப்பாளர்களுடையதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :