தரமான கறவைப்பசுக்கள் முசலிப்பிராந்திய மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் முசலியூர்

கே.சி.எம்.அஸ்ஹர்-

முசலிப் பிராந்தியம் விவசாயம், மீன்பிடி, மந்தை வளர்ப்பு போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் ஒரு காலத்தில்  கொடிகட்டிப் பறந்த பிரதேசமாகும். 1990 பலவந்த வெளியேற்றத்தால் இவர்களின் முழுப் பொருளாதாரமும்  அழிக்கப்பட்டது.

தற்போது இப்பிரதேச மக்கள் படிப்படியாக மீளக்குடியேறி தமது பொருளாதார முயற்சிகளை  மீளவும் மேற்கொள்வதை அவதானிக்க முடிகின்றது. முத்துச்சிலாபம் எனச்சிறப்புப் பெயர்பெற்ற வர்த்தகத் தலைநகரின்  முன்னேற்ற வேகம் மந்த கதியில் உள்ளது.

ஓரு காலத்தில் வடமாகாணத்திற்கான அத்தியவசியப் பொருட்கள் கடல் வழியாகக்  கொண்டுவரப்பட்டு சிலாபத்துறை நகரூடாக வினியோகிக்கப் பட்டமை மறுக்கமுடியாத சரித்திர உண்மையாகும். பிச்சைவாணிபம் குளம், வேப்பங்குளம், பொற்கேணி, அகத்தி முறிப்பு, புதுவெளி, கூடாரங்குளம், முசலி,  சிறுக்குளம், பண்டாரவெளி, மணக்குளம், கொண்டச்சி, பாலக்குழி, மறிச்சிக்கட்டி, கரடிக்குழி போன்ற  பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லீம் மக்களின் கரங்களின் பல ஆயிரக்கணக்கான கறவைப் பசுக்கள், ஆடுகள் என்பன இருந்தன.

இம்மக்களின் வெளியேற்றத்தின் பின்பு அங்கு இருந்த ஆடுகள், மாடுகள் என்பன சிலரால்  கைப்பற்றப்பட்டு விட்டன. யாரோ ஒருவரின் கால் நடைகளுக்கு வேறு யாரோ சிலர் எவ்வித தர்ம உணர்வுமின்றி  சொந்தக்காறராக மாறிவிட்டனர். இது என்ன நியாயம்!

முசலிப்பிரதேசத்தில் பட்டிக்கணக்கில் மந்தைகளை வைத்திருந்தோர் ஒன்று, இரண்டு மாடுகளை வைத்திருப்பதைப் பார்க்கும்  போது என் கண்கள் கலங்குகின்றன. எதிர் காலத்தை மையமாகக் கொண்டு முசலிப்பிரதேசத்தில் கால்நடைகளுக்கென்று தனியான  மேய்ச்சல் தரைகள் இனங்காணப்பட்டு ஒதுக்கப்பட வேண்டும்.

கால்நடை அபிவிருத்தி அமைச்சர் முசலிப்பிரதேசத்திற்கு வருகை தந்து அங்குள்ள நிலைமைகளை முதலில் அவதானிக்க வேண்டும்.  கால்நடை வளர்ப்போரையும், கால்நடைகளை அநியாயமாக இழந்தோரையும் சந்தித்துக் கலந்துரையாட வேண்டும். அதன்  பிற்பாடு இம்மக்களுக்கு உயர்ந்த தரங்களைக் கொண்ட ஆடுகள், கறவைப் பசுக்கள் என்பன பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் றிசாட் பதிவுதீன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களான உனைஸ் பாறுக்  அவர்களும், முத்தலி பாவா பாரூக் அவர்களும் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் கவனத்திற்குக்

கொண்டுவரவேண்டும் என்று இப்பிராந்திய கால்நடை வளர்ப்போர் எதிர்பார்க்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :