முன் நிபந்தனைகள் எதுவுமின்றி வந்தால் மட்டுமே தீர்வு குறித்து பேச முடியும் - அமைச்சர் பஷில்


மிழ்க் கூட்டமைப்பினர் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வந்தால் மட்டுமே இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களோ அல்லது எவ்வாறான அதிகாரங்கள் குறித்தும் கலந்துரையாட முடியும். எனவே தெரிவுக்குழுவுக்கு வாருங்கள், நாங்கள் கலந்துரையாடுவோம் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

எனினும் முன் நிபந்தனை விதிக்காமல் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமிழ்க் கூட்டமைப்பு வரவேண்டும். முன்நிபந்தனைகளன் விதிப்பானது சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே முன்நிபந்தனை விதிக்காமல் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை கூட்டமைப்பு கோருகின்றது. ஏனைய கட்சிகள் வேறுவிதமான யோசனையை முன்வைக்கின்றன. அனைத்து விடயங்கள் குறித்தும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலேயே பேச முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு எவ்வாறான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோ அது போன்ற அதிகாரங்களையே இலங்கையிலும் எதிர்பார்க்கிறோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்தியாவில் தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சென்னை அடையாறில் உள்ள இந்திய தெற்காசிய ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் இலங்கையின் இன்றைய போக்கு’ என்ற தலைப்பில் உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வட கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களுக்கு உரிமை அளிக்கும் வகையில் அரசியலமைப்பின் 13 ஆவது சட்டத் திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டது. ஆனால், இலங்கை அரசாங்கம் அந்தச் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவில்லை என்றும் இரா. சம்மந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகையில்

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை போன்றே இலங்கைக்கும் கோருவதாக கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். அதேபோன்று நாட்டில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் வௌ;வேறு விதமான யோசனைகளை அரசியல் தீர்வுத்திட்டத்துக்காக முன்வைத்துவருகின்றன.

எனவே அனைத்து கோரிக்கைகள் மற்றும் யோசனைகள் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலேயே கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுக்க முடியும். எனவே தமிழ்க் கூட்டமைப்பினர் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்துகொண்டு தமது நிலைப்பாட்டையும் யோசனையையும் முன்வைக்க முடியும்.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமக்கு தேவையான அதிகாரங்கள் தொடர்பில் வெளியில் இருந்து கூறிக்கொண்டிருப்பதைவிட பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வந்து கூறுவதே பொருத்தமானதாக அமையும்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன் நிபந்தனை விதிக்காமல் வரவேண்டும். முன்நிபந்தனைகளை விதிப்பானது அனைத்து செயற்பாடுகளிலும் சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே முன்நிபந்தனை விதிக்காமல் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும்.

எந்தவொரு விடயத்தையும் கலந்துரையாடினால்தான் அதற்கு தீர்வு கிடைக்கும். உதாரணமாக ஒருவர் ஒரு பொருளை குறித்த விலையில் விற்க முன்வருவார். ஆனால் அதனை கொள்வனவு செய்ய முயற்சிப்பவர் வேறொரு விலைக்கு கேட்பார். இந்நிலையில் இரண்டு தரப்பினரும் அமர்ந்து கலந்துரையாடும்போது ஒரு தீர்வுக்கு வர முடியும். அதேபோன்றுதான் அனைத்து விடயங்களும் அமைகின்றன. எனவே கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வந்து பேசவேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :