சொந்தக்காணிகள் பாதிக்கப்பட்டால் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - ஹஸன் அலி



ஸனலி எம்பியின் முறைப்பாட்டையடுத்து அமைச்சர் நிமல் சிறிபாலஅதிகாரிகளுக்கு உத்தரவு.

ம்மாந்துறையிலுள்ளவளத்தாப்பிட்டிநீர்த்தேக்கத்தின் நீர்மட்டத்தைவழமைக்குமாறாக 10அடி மட்டத்திற்குஉயர்த்துவதற்குதன்னிச்சையாகதிணைக்களஅதிகாரிகள் எடுத்துள்ளமுடிவினால் முஸ்லிம் விவசாயிகள் பலர்அனியாயமாகபாதிக்கப்பட்டுள்ளதாகசென்ற 5ம் திகதிபுதன்கிழமைபாராளுமன்றத்தில் நடைபெற்றநீர்பாசன,நீர்வளமுகாமைத்துவஅமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தின்போதுபாராளுமன்றஉறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமுமாகிய ஹஸன் அலிமுறையிட்டார்.

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாதலைமையில் நடைபெற்றகுழுக்கூட்டத்தில் பிரதிஅமைச்சர்,அமைச்சின் செயலாளர் மற்றும் நீர்ப்பாசனஅமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஹஸன் அலிஎம்.பி. அமைச்சரிடம் பின்வருமாறுதெரிவித்தார்.

'கடந்தடிசம்பர் மாதம் வரவுசெலவுத்திட்டவிவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றவேளையில்உங்களதுகாரியாலயத்தில் எமதுபாராளுமன்றஉறுப்பினர்கள்,அமைச்சின் நீர்ப்பாசனபிரிவுஅத்தியட்சகர்,மற்றும் சம்பந்தப்பட்டமுக்கியஅதிகாரிகள்,அம்பாறைமாவட்டஅரசாங்கஅதிபர்,சம்மாந்துறைபிரதேசசெயலாளர்,விவசாயப் பிரதிநிதிகள் ஆகியோர்கலந்துகொண்டஒரு கூட்டம் உங்கள் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் உங்கள் தீர்மானத்தைநீங்கள் மிகவும் தெளிவாகவெளியிட்டிருந்தீர்கள்.

அதாவது,நீர்ப்பாய்ச்சல் திணைக்களத்தின் பிரதமஅத்தியட்சகர் அல்லதுஅவரால் நியமிக்கப்படும் உயர்நிலைஅதிகாரிகள் போன்றோர்வளத்தப்பிட்டிநீர்த்தாங்கியைநேரடியாகச் சென்றுபார்வையிடுவதெனவும் அதன்பின்னர் விவசாயப்பிரதிநிதிகள்,மற்றும் பாராளுமன்றஉறுப்பினர்கள்,சம்பந்தப்பட்ட ஏனைய திணைக்களஅதிகாரிகள் ஆகியோருடன் ஒருகலந்தாலோசனையைசெய்து இறுதி முடிவைஎடுக்கப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள். இரண்டுவாரங்களுக்குள் அந்தசந்திப்பு இடம்பெறவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தீர்கள். இன்று இரண்டுமாதகாலம் சென்றபின்பும்கூட அந்தசந்திப்புநடைபெறவில்லை.

அதனால் கடந்த மூன்றுதசாப்தங்களாகஎவ்விததடங்கல்களுமின்றிவிவசாயம் செய்யப்பட்டுவந்தஎமதுசமூகத்தைச் சேர்ந்தவிவசாயிகளின் சுமார் 350 ஏக்கர் காணிகள் நீருக்கடியில் தற்போது மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

தற்போதுநீர் நிலையின் நீர்மட்டம் ஒருதலைப்பட்சமாகஉயர்த்தப்பட்டதால் இவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது. இதற்குஒருநியாயமானதீர்வைப் பெற்றுத்தர வழி கூறுங்கள்'என்றுஅவர் கேள்விஎழுப்பினார்.

இதற்குப்பதிலளித்தநீர்ப்பாசன இலாகாபிரதமஅத்தியட்சகர் தான் அந்தப் பகுதிக்குவிஜயம் செய்துபார்வையிட்டதாகவும் அங்குஅப்படிநீர்மட்டம் உயர்த்துவதற்குதற்போதுநடவடிக்கைமேற்கொள்ளப்படவில்லைஎனத் தெரிவித்தார்.

இதனைஏற்றுக் கொள்ளாத ஹஸன் அலிஎம்.பி.'அப்படியாயின் ஏன் நீங்கள் விவசாயிகளுக்குவழமைபோல் விவசாயம் செய்வதற்குஅனுமதிவழங்கமுடியாது? விவசாயிகளின் காணிகள் தற்போதுநீரில் மூழ்கிக் கிடப்பதாகதன்னிடம் அவர்கள் முறையிடுகின்றார்கள். சொந்தமாகஉறுதிகள் வைத்திருக்கும் காணிகளைஎப்படிநீங்கள் தீடீர் எனநீர்மட்டத்தைஉயர்த்துவதன் ழூலம் ழூழ்கடிக்கலாம்'; என்றுவாதிட்டார்.

இதனைஏற்றுக் கொண்டஅமைச்சர்; உடனடியாக இருவாரங்களுக்குள் மக்கள் பிரதிநிதிகளினதும் விவசாயப் பிரதிநிதிகளினதும் பங்களிப்புடன் கூட்டமொன்றைஏற்படுத்தி இப்பிரச்சினைக்கானதீர்வைஎடுக்குமாறுஅதிகாரிகளிடம் கூறியதுடன் விவசாயிகளின் சொந்தக் காணிகள் நீர்மட்டம் அதிகரிக்கப்படுவதனால் மூழ்கிப் போனால் அவர்களுக்குஉரிய நஸ்டஈடுகளைவழங்கவேண்டும்எனவும்வேண்டிக்கொண்டார்.

மக்களின் வாழ்வாதாரங்களில் இவ்வாறானஆக்கிரமிப்புகளைச் செய்யவதைதன்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதுஎனவும் அவர்குறிப்பிட்டார்.

அமைச்சரின் வேண்டுகோளின்படிவெகுவிரைவில் இக்கூட்டத்தைகூட்டுவதற்கானபொறுப்பைஅமைச்சின் செயலாளர் ஏற்றுக் கொண்டார்.

ஏம் ரீ ஹஸன் அலி பா.உ.
செயலாளர்நாயகம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :