நாட்டை ஆட்டிப்படைக்கவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் முயற்சிக்கின்றன. - அரசாங்கம்



லங்கையில் யுத்தக் குற்றம் மனித உரிமை மீறல் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களை முன்வைத்து இலங்கைக்குள் தலையிட்டு அரசியல் ஸ்திரமின்மையை ஏற்படுத்தி நாட்டை ஆட்டிப்படைக்கவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் முயற்சிக்கின்றன. அதன்மூலம் பிராந்தியத்தில் தமது பலத்தை அதிகரிக்கவே முயற்சிக்கப்படுகின்றது என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இதன் காரணமாகவே பிராந்தியத்தில் பல நாடுகளுக்கு இடையில் முறுகல்களை ஏற்படுத்தவும் அமெரிக்கா முயற்சித்துவருகின்றது. நாடுகள் விடயத்தில் அமெரிக்கா திரைக்குப் பின்னால் எவ்வாறு செயற்படுகின்றது என்பதற்கு உக்ரேன் விவகாரம் குறித்த தொலைபேசி உரையாடல் சிறந்த உதாரணமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் இலங்கையை அடிமைப்படுத்துவதற்கான முயற்சியை முறியடிக்க மேல் மற்றும் தென் மாகாண மக்கள் ஆளும் கூட்டணிக்கு வாக்களிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

நாட்டின் எதிர்காலம் தொடர்பான தீர்மானம் ஒன்று எடுக்கபடவேண்டிய தீர்க்கமான காலகட்டத்தில் மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுகின்றது. காரணம் நாடு படிப்படியாக சர்வதேசத்தின் சில தரப்புக்களின் தலையீட்டுக்கு உட்படுத்தப்படுவதற்கு முயற்சிக்கப்பட்டுவருகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் நாட்டுக்கும் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கும் எதிராக தாக்குதல் நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

உயிர் தியாகம் பொறுமை மனிதாபிமானம் போன்ற விடயங்களை முன்வைத்துப் பெற்றுக்கொண்ட வெற்றியை மீண்டும் திருப்பிவிடுவதற்கு சர்வதேச மட்டத்தில் முயற்சிக்கப்படுகின்றது. அதன்மூலம் இந்தத் தேர்தலில் சர்வதேசத்துக்கு சிறந்த பதில் ஒன்றை மக்கள் வழங்கவேண்டியுள்ளது.

அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் சில விடயங்களை முன்வைத்து இலங்கையில் தலையீடுகளை மேற்கொண்டு நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டுசெல்ல முயற்சிக்கின்றன. அதன் ஊடாக பிராந்தியத்தில் தன்னை பலப்படுத்தும் முயற்சியில் இந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்த நோக்கங்களுக்ககாவே ஜப்பான் மற்றும் சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

எமது நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்துவதே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நோக்கமாகும். இதில் நாட்டின் எதிர்க்கட்சிகள் சிக்கிவிடாமல் இருக்கவேண்டும். அமெரிக்கா நாடுகள் விடயததில் திரைக்குப் பின்னால் எவ்வாறு செயற்படுகின்றது என்பதற்கு அண்மையில் சிறந்த உதாரணம் ஒன்று வெளிப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பேச்சாளர் ஒருவர் யுக்ரேனுக்கான அமெரிக்க தூதுவருடன் உக்ரேனில் அடுத்த ஜனாதிபதியாக யார் இடம்பெறவேணடும் என்பது குறித்து தொலைபேசி ஊடாக மேற்கொண்ட உரையாடல் அம்பலத்துக்கு வந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவினால் திரைக்குப் பின்னால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை புரிந்துகொள்ள முடியும்.

அந்தவகையில் இலங்கையில் யுத்தக் குற்றம் மனித உரிமை மீறல் மற்றும் பொறுப்புக்கூறல் என்ற எந்த விடயமும் இல்லை. ஆனால் இந்த விடயங்களை அமெரிக்கா முன்வைத்து நாட்டுக்குள் தலையிட்டு நாட்டை ஆட்டிப்படைக்க முயற்சிக்கப்படுகின்றது. இதற்கு தேர்தலில் மக்கள் பதில் கொடுக்கவேண்டும்.

இநநிலையில் நாட்டின் எதிர்க்கட்சிகள் எஹலபொலவின் கதாபாத்திரத்தை முன்னெடுக்க முயற்சிக்கக்கூடாது. வெள்ளையரின் ஆட்சிக்காலத்தில் எஹலபொல என்பவர் வெள்ளையரின் உதவியுடன் இராஜசிங்க மன்னனை பதவி நீக்கிவிட்டு தான் அரசராக முயற்சித்தார். ஆனால் இறுதியில் அவரால் அரசராக முடியவில்லை. அவருக்கு சுதந்திரம் கிடைக்கவுமில்லை. இந்த எஹலபொலவின் நிலைமைக்கு ஆளாகிவிடவேண்டாம் என்று எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :