வீதியை புனரமைக்குமாறு அமைச்சர் உதுமாலெப்பையிடம் பிரதேச மக்கள் கோரிக்கை


அபுஸஜாட்-

முப்பது வருடங்களுக்கு மேலாகப் புனரைமப்புச் செய்யப்படாத கல்முனைக்குடியின் உள்ளுர் வீதிகளை புனரமைப்புச் செய்யுமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம். எஸ் உதுமாலெப்பையிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கல்முனைக்குடிப் பிரதேசத்தின் சில உள்ளுர் வீதிகள் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்ற போதிலும் பல வீதிகள் இன்னும் புனரமைப்புச் செய்யப்படாமலே உள்ளன.

கல்முனைக்குடியிலுள்ள டாக்டர் றிஸ்வி வீதி, ஹனிபா வீதி, தைக்கா வீதி, மத்திய வீதி, பள்ளிவாசல் ஒழுங்கை, அலியார் வீதி புதிய நகர மண்டப வீதி, காசிம் வீதி போன்ற பல வீதிகள் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக புனரமைப்புச் செய்யப்படாது குண்றும் குழியுமாகக் காணப்படுகிறது.

கல்முனைக்குடியின் முக்கிய வீதிகளில் மத்திய வீதி அதி முக்கியத்துவம் வாய்ந்தது.இவ்வீதியினூடாகக் குறிப்பாக கல்முனைக்குடியின் நான்கு பாடசாலைகளுக்கும் செல்லும் மாணவர்கள் இவ்வீதியையே பயன்படுத்துகின்றனர். மழை காலங்களின்போது இவ்வீதியைப் பயன்படுத்த முடியாது மாணவர்களும், பாதசாரிகள் படாதபாடுபடுவதையும் வாகனங்கள்; செல்ல முடியாத நிலையையும் காண முடிகிறது.

அத்துடன், இவ்வீதியிலுள்ள ஒரு சில சுயநலம் விரும்பும் குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளுக்குள் வாகனங்களைச் சிரமமின்றி கொண்டுசெல்வதற்காக பாதசாரிகளையும் இவ்வீதியால் பயணிக்கும் வாகனங்களையும் கருத்திற்கொள்ளாது தங்களது வீடுகளுக்கு முன்னால் காணப்படும் குழிகளை நிரப்புவதற்காக கற்கள் நிறைந்த மண்களைக்கொண்டு நிரப்பி இவ்வீதியின் அவல நிலையை மேலும் அவலத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலைமைகளைக் கருத்திற்கொண்டு கல்முனைக்குடியின் மத்திய வீதி உட்பட தசாப்தங்கள் பல கடந்து புனரமைப்புச் செய்யப்படாத உள்ளுர் வீதிகளை மிக அவசரமாக புனரமைப்புச் செய்து தருமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பையிடம் கல்முனைக்குடியின்; மத்திய வீதி குடியிருப்பாளர்கள் உட்பட பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்;.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :