பிரிட்டனில் நன்றாக தூங்கி கொண்டிருந்த முன்னாள் கணவரின் காதை கிழித்த மனைவி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரிட்டனின் குளூசெஸ்டர்ஷயர் பகுதியில் உள்ள சின்டர்போர்டில் வசிப்பவர் ஜூலி ஆன் இவான்ஸ், இவரது மாஜி கணவர் ஜேம்ஸ் இவான்ஸ்.விவாகரத்தான இவர்கள், ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
ஜேம்ஸ் வீட்டில் இருப்பதை விரும்பாத ஜூலி, அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.ஆனால் ஜேம்ஸ் வெளியே செல்லவில்லை, எனவே ஆத்திரமடைந்த ஜூலி தூங்கிக் கொண்டிருந்த ஜேம்சின் மீது தண்ணீரை ஊற்றியுள்ளார்.
அப்படியும் ஜேம்ஸ் எழுந்திருக்காத காரணத்தால், அவரது முகத்தில் வெண்ணெய் தடவி, டோஸ்டரால் சுட முயன்றுள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே சண்டை எழுந்ததால், ஜேம்சின் காதை ஜூலி கிழித்தார், இதில் அவருக்கு 13 தையல்கள் போடப்பட்டன.
இதனையடுத்து ஜூலி மீது நடவடிக்கை எடுக்கும்படி, ஜேம்ஸ் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
0 comments :
Post a Comment