தமிழ் சினிமா ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கிய யுவன் சங்கர் ராஜா, சமீபகாலமாக எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் 'தரமணி' படத்தின் செய்தியாளர் சந்திப்பிற்கும் அவர் வரவில்லை.
காரணம்? மீடியாக்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே?அப்படியே மற்றொரு காரணம் அவர் புதிதாக தாடி வளர்த்து வருகிறாம். இதனால் இனி அவர் முழு இஸ்லாமியராக தோற்றமளிக்கப்போகிறாராம்.
தற்போது இவரை தொடர்ந்து தமிழ் திரையுலகத்தில் மேலும் சில நடிகர்கள் இஸ்லாமியத்தை தழுவப் போகிறார்களாம். இவர்கள் அத்தனை பேரும் யுவனின் நண்பர்கள் என்றும் சினிமா வட்டாத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.
அதில் இரு ஹீரோக்களைப் கிசுகிசுவாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்பாவின் செல்லப் பிள்ளை என்று செல்லமாக அழைக்கப்படுகிறவர். இவரது முதல் படமே ஜெயமானதால் இன்றைய கோடம்பாக்கம் கொண்டாடும் நடிகர். அப்பா முஸ்லீமாக இருந்தாலும், அம்மா இந்து. அதன் காரணமாக இந்துவாகவே வளர்க்கப்பட்டவர் இவர்.
தனது பெயரை விரைவில் மாற்றிக் கொண்டு முழு இஸ்லாமியராக மாறப் போகிறாராராம்.இவரை தொடர்ந்து இன்னொரு ஹீரோவும் தன்னை இஸ்லாத்துக்குள் இணைத்துக் கொள்ள தயாராகி வருகிறாராம். இரண்டெழுத்து ஹீரோவான இவரை சிம்புவுக்கு போட்டியாக சில காலம் மீடியாக்க்ள் சித்தரித்து வந்தன.
இவர்கள் இருவருமே யுவனின் இந்த மாற்றத்தையும் அவரது தைரியத்தையும் நேரில் பாராட்டியதுடன், 'நாங்களும் உங்களை பின்பற்ற நினைத்திருக்கிறோம்' என்று கூறிவருகிறார்களாம். கோடம்பாக்கத்தில் இன்னும் எத்தனை மாற்றங்கள் நிகழப்போகிறதோ?
0 comments :
Post a Comment