அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிக்க சம்மேளனம் முடிவு

ட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டிகளை முற்றாக புறக்கணிப்பதற்கு அனைத்து விளையாட்டுக் கழக சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

அனைத்து விளையாட்டுக் கழக சம்மேளனத்தின் விசேட உயர்பீடக்கூட்டம் நேற்றிரவு தலைவர் ஹம்ஸா சனூஸ் தலைமையி்ல் அவரது இல்லத்தி்ல் நடைபெற்றபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை அனைத்து விளையாட்டுக் கழக சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகம், ஹங்லயன்ஸ் விளையாட்டு்க் கழகம், லக்கி விளையாட்டுக் கழகம், அஸ்ரப் விளையாட்டுக் கழகம்,மாக்ஸ்மென் விளையாட்டுக் கழகம்,பைனா விளையாட்டுக் கழகம், நியுஸ்டார் விளையாட்டு்க் கழகம், எலோ லைட் விளையாட்டுக் கழகம், ஹிரோ விளையாட்டுக் கழகம் ஆகிய கழகங்கள் கலந்து கொண்டே போட்டிகளை புறக்கனிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து விளையாட்டுக் கழகங்கள் ஒன்று சேர்ந்து எடுத்துள்ள திர்மானத்தை இன்று காலை 9.00 மணிக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் கையளிக்க முடிவு செய்யப்பட்டு்ள்ளதாக தலைவர் ஹம்ஸா சனூஸ் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டிகளின் முதற்கட்ட குழுநிலைப்போட்டிகளில் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் குறிப்பிட்ட ஒரு கழகம் ஏனைய கழக வீரா்களை மைதானத்தில் தாக்கி அச்சுறுத்தி அட்டாகாசம் செய்து வருவதாலும், நடுவர்களின் பக்கச்சார்பான தீர்ப்புக்களை கண்டித்தும் இ்ன்னும் பல விடயங்களை முன்னிறுத்தியும் விளையாட்டு்ப் போட்டியை புறக்கணிப்பதற்கு விளையாட்டுக் கழகங்கள் திர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :