இரத்மலானை கொவிபெலவத்தை சந்தியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு கெட்டு சீரழிந்துள்ள நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும்.தற்பொழுது நாட்டில் உள்ள போதைப் பொருள் வியாபாரிகள் அவற்றை மொத்தமாக கொண்டு வருகின்றனர்.
போதைப் பொருள் தேவை என்றால் பிரதமரின் அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பை எடுக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தை எடுத்துக்கொண்டால் 105 அமைச்சர்கள் உள்ளனர். நாடாளுமன்றத்தில் இருப்பவர்களில் அதிகளவானவர்கள் திருட்டுக் கூட்டத்தினர்.
இந்த திருடர்களை அரசியல் வட்டத்தில் இருந்து விரட்ட வேண்டிய காலம் வந்துள்ளது. ஆளும் கட்சியின் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் உதயகம்மன்பில அவர்தான் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உள்ள மிகப் பெரிய பொய்யர்.
பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்காக ஜே.வி. பியே எப்போதும் போராடி வந்தது. அதன் காரணமாகவே அரசாங்கம் பட்டதாரிகளுக்கு அரசாங்கம் தொழில் வாய்ப்புகளை வழங்கியது என்றார்.
0 comments :
Post a Comment