அக்கரைப்பற்றில் நாட்டில வேகமாக அதிகரித்து வரும் புற்று நோய் சம்பந்தமான விழிப்புணர்வு



ஏ.ஜி.ஏ.கபூர், அக்கரைப்பற்று-

நாட்டில தற்போது வேகமாக அதிகரித்து வரும் புற்று நோய் சம்பந்தமாக பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அக்கரைப்பற்று அல்-ஜென்னத்துல் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புற்று நோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்று அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் வித்தியாலய அதாஉல்லா ஆர்ட் கலரியில் நேற்று (07.02.2014) வெள்ளிக்கிழமை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பட்டதாரி மாணவன் ஏ.எம்.சாஜித் அஹமட் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையின் முன்னாள் மாவட்ட வைத்திய அதிகாரியும், ஜெய் வைத்திய நிலையத்தின் பணிப்பாளருமான டாக்டர் திருமதி சித்ரா தேவராஜன், திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த குடும்ப சுகாதார மருத்துவர் திருமதி சிவமலர், மௌலவியா ஏ.ஸர்மிளா, மேற்பார்வை ஆண் தாதிய உத்தியோகத்தர் எம்.ஏ.சி.நகீப், அஸ்-ஸிறாஜ் மஹா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.உவைஸ், சமுர்த்தி முகாமைத்துவ உதவியாளர் மற்றும் எம்.அனஸ் ஆகியோர்களுடன் ஏராளமான குடும்ப்ப பெண்களும் கலந்து கொண்டனர்.

டாக்டர் திருமதி சித்ரா தேவராஜன்,; குடும்ப சுகாதார மருத்துவ தாதி; திருமதி சிவமலர், மௌலவியா ஏ.ஸர்மிளா, மேற்பார்வை ஆண் தாதிய உத்தியோகத்தர் எம்.ஏ.சி.நகீப் ஆகியோர் புற்று நோய் பற்றியும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் கருப்பைவாய் புற்று நோய், மார்பகப் புற்று நோய், கழுத்தில் ஏற்படும் தைரோயிட் புற்று நோய் மற்றும் வெற்றிலை சாப்பிடுபவர்களுக்கும் , புகைப்பவர்களுக்கும் ஏற்படுகின்ற வாய்ப் புற்று நோய், புகைப்பவர்களுக்கும், புகைப்பவருக்குப் பக்கத்தில் நின்று அந்தப் பகையை சுவாசிப்பவர்களுக்கும் ஏற்படுகின்ற சுவாசப்பை புற்று நோய், குறை மாதப் பிரசவம், அங்கவீனமான குழந்தை பிறத்தல், கருச் சிதைவு முதலிய விடயங்கள் பற்றியும் போதிய விளக்கங்களை வழங்கினார்கள்.

விஷேடமாக மௌலவியா ஏ.ஸர்மிளா அவர்கள் புற்று நோய் உட்பட பல்வேறு விதமான நோய்கள் பற்றியும் அதற்கு இஸ்லாத்தில் கூறப்படுகின்ற சிகிச்சை முறைகள் பற்றியும்,

பெருமானார் அவர்கள் கூறிய நோய் நிவாரணிகள் பற்றியும் சிறப்பான விளக்கங்களை வழங்கினார்.

மாறி வரும் மக்களின் பழக்கவழக்கங்கள், சுகாதார நடைமுறைகளை ஓழுங்காகப் பின்பற்றாமை.பாஸ்புட் உணவுகளை அதிகமாக உண்ணுதல், சுகாதார முறைப்படி தயார் செய்யாத உணவுகளை வாங்கி உண்ணுதல், செயற்கை சுவையூட்டிகள், நிறமுட்டிகள் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுகளை அதிகமாக உண்ணுதல், இயந்திரமயமான வாழ்க்கை முறைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டமை, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமை, நோய்கள் ஏற்படுகின்றபோது உரிய நேரத்தில் மருத்துவம் செய்யத் தவறுதல் முதலிய காரணங்களால் பயங்கர புற்று நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு உட்படுகின்றார்கள் என்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவினை உண்பதன் முலம் நீண்ட நாட்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்பதோடு பெண்கள் தங்களைப் அதிகமாகப் பாதிக்கும் கருப்பைவாய் புற்று நோய், மார்பகப் புற்று நோய், கழுத்தில் ஏற்படும் தைரோயிட் புற்று நோய் மற்றும் வெற்றிலை சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுகின்ற வாய்ப் புற்று நோய் சம்பந்தமாக மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அடிக்கடி மருத்துவ பரிசோதனைகளைச் செய்து நோய் அரும்பியுள்ளதா எனப் பார்க்க வேண்டும் என்றும் டாக்டர் திருமதி சித்ரா தேவராஜன் பெண்களுக்கு அறிவுரை கூறினார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :