ரோஷான் ஏ.ஜிப்ரி-
அட்டாளைச்சேனை,ஆலங்குளத்தை பிறப்பிடமாகவும்,இறக்காமத்தை வாழ்விடமாகவும் கொண்ட அப்துல் மஜீத் நஜிமுதீன் என்பவர் (வயது 35) இன்று கட்டாரில் வபாத்தானார் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்”மூன்று பிள்ளைகளின் தந்தையான மேற்படி நஜிமுதீன் அவர்கள்
தொழில் நிமித்தம் காகித ஆலையொன்றில் பணி புரிய கட்டார் நாட்டிற்கு வந்து எட்டு மாதங்கள் ஆகின்ற வேளை நேற்று இரவு சனயா 6 இல் உள்ள தனது படுக்கை அறையில் உறங்கியவர் காலையில் எழுந்திருக்கவில்லை சந்தேகம் கொண்ட சக தோழர்கள் எழுப்பியபோது அவரது உயிர் உடல் கூட்டை விட்டு பிரிந்திருந்தது.
அன்னாரின் பிரிவால் துயருறும் அவர் மனைவி,குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வோம்.
தற்போது ஜனாஸா கட்டார் ஹமத் மருத்துவ மனையில் பிரிவு எண் 312 இல் பரிசோதனைக்காக வைக்கப் பட்டுள்ளது.
ஜனாஸா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப் படும்.
0 comments :
Post a Comment