
கல்குடா கல்வி வலயத்திலுள்ள பாடசாலை பண்ட் வாத்தியக் குழுக்களுக்கிடையில் போட்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது
கல்குடா கல்வி வலயத்தில் ஏறாவூர்பற்று 2, கோறளைப்பற்று, வாகரை ஆகிய மூன்று கல்வி கோட்டங்களைச் சேர்ந்த ஒன்பது பாடசாலைகள் பங்குபற்றிய இப்போட்டியில் பேத்தாழை விபுலானந்தா வித்தியாலயம் முதலாம் இடத்தையும், செங்கலடி மத்திய கல்லூரி இரண்டாம் இடத்தையும், வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
கல்குடா வலயயக் கல்விப் பணிப்பாளர் செ.சிறிகிருஸ்ணராஜா தலைமையில் இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், கிரான் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி தெட்சணாகௌரி தினேஷ், வாகரை பிரதேச செயலாளர் செல்வி ஆர்.ராகுலநாயகி, வேள்ட் விஷ்ன் கிரான் முகாமையாளர் எஸ்.பி.பிரேமசந்திரன்;, முறக்கொட்டாஞ்சேனை முகாம் இராணுவ பொறுப்பதிகாரி மேஜர் தேவாலஹம, வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக்கல்வ அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment