பி.எம்.எம்.ஏ.காதர்-
கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான போதைப் பொருள் நிவாரன வேலைத்திட்டம் தொடர்பாக 'நாளைய போதையற்ற கிராமம் இன்றைய இளைஞர்களின் கையில்'; என்ற தலைப்பில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு அண்மையில் கல்லூரி அஷ்ரப் மண்டபத்தில் நடைபெற்றது.
மருதமுனை நற்பிட்டிமுனை சமுர்த்தி வலய முகாமையாளர் எம்.எம்.முபீன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் கலந்து கொண்டார்.
அதிதிகளாக அல்-மனார் அதிபர் எம்.எம்.ஹிர்பகான், கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், சமுர்த்தி மகா சங்க முகாமைத்தவப் பணிப்பாளர் திருமதி பரீறா சஹீட், சமுர்த்தி திட்ட முகாமையாளர் ஏ.சீ.அன்வர், அகியோருடன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
கல்முனை பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபல்யு.ஏ.ஹப்பார் வளவாளராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புப்பற்றி விளக்கவுரை நிகழ்தினார்.
0 comments :
Post a Comment