எஸ்.அஷ்ரப்கான்-
கொழும்பிலிருந்து வந்துகொண்டிருந்த கனரக வாகனம் (கெண்டைனர்) ஒன்றும் திருகோணமலையிலிருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த வான் ஒன்றும் இப்பாகமுவ எனும் இடத்தில் இன்று (14) அதிகாலை 1.00 மணியளவில் மோதி விபத்துக்குள்ளானதில் வான் சாரதி சிறுகாயங்களுடன் மயிரிழையில் உயிர்தப்பினார்.
இப்பாகமுவ பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தின் காரணமாக
கனரக வாகனத்தின் (கெண்டைனர்) முன்பகுதி சிறு சேதத்திற்குள்ளாக்கப்பட்டதுடன், வானின் முன்பகுதி முற்றாக சேதமடைந்ததுள்ளது. இவ்விபத்தில் உயிரிழப்புக்கள் ஏற்படாதபோதும், கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாவட்டங்களிலிருந்து கொழும்பிற்கும் சென்ற வாகனங்கள், பயணிகள் அனைவரும் சுமார் 2 மணித்தியாலங்கள் வரை காத்திருந்ததுடன், போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.
பிரதேச போக்குவரத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டமையை தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், போக்குவரத்தையும் சீர்செய்தனர்.
0 comments :
Post a Comment