-எம்.வை.அமீர்-
கல்வி அமைச்சும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கணணி வன்பொருள் மற்றும் நெட்வொர்க்கிங் என்ற தலைப்பில் குறுகிய கால பயிற்சி நெறி ஒன்று இன்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊழியர் அபிவிருத்தி நிலையத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இப்பயிற்சி நெறிக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து கணினி தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மொத்தமாக 100பேர் தெரிவு செய்யப்பட்டு, அதிலிருந்து முதற்கட்டமாக 25 ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்று ஆரம்பமானது.
2 வாரங்கள் வதிவிடங்களுடன் கூடிய இப்பயிற்சி நெறியின் ஆரம்ப நாளான இன்று, (2014.02.10) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊழியர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் கலாநிதி எஸ்.எம்.அஹ்மட்லெப்பை தலைமை தாங்கிய அதேவேளை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்ததுடன். கல்வி அமைச்சில் இருந்து கணினி தகவல் தொழில்நுட்பத்துக்கு பொறுப்பான பணிப்பாளர் ஜீ.எம்.நீல் குணதாச விசேட அதிதியாகவும் கலந்து கொண்டார்.
கணணி வன்பொருள் மற்றும் நெட்வொர்க்கிங் பயிற்சி நெறியின் கல்விசார் பயிற்சி இணைப்பாளராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட கணிதத்துறையின் தலைவர் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் பங்குகொண்டு பயிற்சிகளை நெறிப்படுத்தினார்.
0 comments :
Post a Comment