முசலிக்கிராமத்தின் மையவாடிக் காணியைக் காப்பாற்றுங்கள்

முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்-

சிலாவத்துறை அரிப்பு வீதியில் அமைந்துள்ள பழைமையான முசலிக்கிராமத்திற்குச் சொந்தமான மையவாடிக் காணியைக் கைப்பற்றி அதனை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் முஸ்தீபுகளில் முசலிப்பிரதேச செயலகம் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது.அம்மையவாடி 500 வருடங்கள் பழைமையானது.அங்குள்ள நடுகற்களை ஆய்வு செய்தால் இதனை அறிய முடியும்.

மையவாடிகளில் எவ்வித கட்டிடங்களும் அமைக்க முடியாது. அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களின் புனித பூமியான இது மதிக்கப்பட வேண்டியது. பாதுகாக்கப்பட வேண்டியது. இம்மையவாடிக் காணியை கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக ,அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களும் ,பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்களும் ,மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களும் ,முசலிப் பிரதேச சபைத் தவிசாளர் அப்துல் வஹாப் எஹியான் அவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முசலி மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

இக்காணி தொடர்பான விடயங்கள் முன்னாள் முசலிப்பிரதேச செயலாளருக்கும் நன்கு தெரியும்.அம் மையவாடிக் காணியை தரிசிப்பதன் மூலம் உண்மைகளை புரிந்து கொள்ளலாம்.

குறிப்பு-மையவாடிக் காணிகள் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சின் அதிகாரத்தின் கீழ் உள்ளது.ஆகவே இக்காணியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு முசலிப் பிரதேச சபைக்கு உண்டு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :