இலங்கை பணிப்பெண் ஒருவர் தான் தொழில்புரிந்த வீட்டிற்கு தீ வைத்துள்ளதாக சவுதி அரேபிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் குறித்த பெண் வீட்டிற்கு தீ வைத்துள்ளதாகவும், தவறுதலாக தீ பற்றியதாக பொலெிஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டிற்கு தீ வைக்கப்போவதாக பணிப்பெண் ஏற்கனவே அச்சுறுத்தல் விடுத்ததாகவும், வேண்டுமென்றே அவர் தமது வீட்டிற்கு தீ வைத்துள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து குறித்த பணிப்பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டின் உரிமையாளர்களின் தவறான நடத்தைகளுக்கு பழிவாங்கும் முகமாக பணிப்பெண் வீட்டிற்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக சவுதி அரேபிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment