முதலில் ஆடிய கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 150 ரன்களை எடுத்தது. அந்த அணியின் பென்னி அபாரமாக ஆடி 39 பந்துகளில் 72 ரன்களை குவித்தார். அந்த அணியின் ஸ்லிபாவும் தன் பங்குக்கு 31 ரன்களை சேர்த்தார்.
பின்னர் ஆடிய சென்னை ரைய்னோஸ் அணி 138 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணி வெற்றி பெற்றது.
சென்னை அணியில் விக்ராந்த் அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 77 ரன்கள் குவித்த போதும் இக்கட்டான கட்டத்தில் அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக விஷ்ணு மட்டுமே 30 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்காததால் சென்னை அணி தோல்வியை தழுவியது.
ஆனால் இப்போட்டியில் கேரளா அணியின் பீல்டிங் மிக அற்புதமாக இருந்தது. நேற்றைய வெற்றியின் மூலம் அந்த அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
சென்னை அணி 3 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்து நடைபெறவுள்ள போஜ்புரி டப்பாங்சுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment