தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பில் தேர்தல்கள் செயலகம் அறுவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அத்துடன் தேர்தல் சட்டங்களை கடுமையாக செயற்படுத்துமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக பாதயாத்திரை நடத்துதல் வேட்பாளர் இல்லாத வாகனங்களில் பிரசார பலகைகள், அறிவித்தல்கள், பதாகைகள், ஸ்டிக்கர் ஆகியவற்றை காட்சிப்படுத்தல் போன்றன தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல்கள் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

தேர்தலுடன் தொடர்புடைய பிரச்சார அலுவல்களை மேற்கொள்ளும் போது மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தின் கீழும் மற்றும் ஏனைய சட்டங்களின் கீழும் காட்டப்பட்டுள்ள சட்டவிரோத செயற்பாடுகள் இன்றேல் தவறுகளைச் செய்வதிலிருந்து தவிர்ந்திருக்கு­மாறு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் என்பனவற்றின் வேட்பாளர்களை அறிவூட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் சில வேட்பாளர்கள் அச்சட்டங்களை மீறுவதாக முறைப்பாடுகள் மற்றும் அறிக்கைகள் கிடைத்துள்ளதோடு வேட்பு மனுக் காலக்கெடுவினுள் விஷேடமாக வேட்பு மனுக் கையேற்கும் இறுதி இரு தினங்களிலும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான அறிக்கைகள் மற்றும் முறைப்பாடுகள் பெருமளவான எண்ணிக்கையில் கிடைக்கப்பெற்ற முதற்தடவை இதுவாகும்.

இச்சட்ட மீறல்கள் விஷேடமாக சட்ட விரோதமான ஊர்வலங்கள் மற்றும் பாத யாத்திரைகள் நடத்துதல், வேட்பாளர் இல்லாத வாகனங்களில் பிரச்சாரப் பலகைகள், அறிவித்தல்கள், பதாகைகள், ஸ்ரிக்கர்கள் என்பவற்றைக் காட்சிப்படுத்தல், அங்கீகாரம ளிக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் தவிர்ந்த இடங்களில் அறிவித்தல் பலகைகள், உருவப்படங்கள், கொடிகள், பதாகைகளைக் காட்சிப்படுத்தல், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி சாதனங்களினூடாகப் பிரச்சாரம் செய்தல், பதிவு செய்யப்படாத இலக்கங்களைக் கொண்ட வாகனங்களில் பயணித்தல், பெருந்தெருக்களில் கட்சிகள் / குழுக்கள் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள், இலக்கங்கள் என்பனவற்றை வரைதல் போன்ற தவறுகள் தொடர்பில் தேர்தலின் சட்டத்திற்கு ஏற்புடைய விதத்திலும், ஏனைய பொதுவான மற்றும் விஷேடமான சட்டங்களின் கீழும் பொலிஸார் செயற்படுவதாக பொலிஸ் அலுவலர்களினால் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சட்டங்களைக் கடுமையாக செயற்படுத்துமாறு மேல் மற்றும் தென் மாகாணத்தின் அனைத்து அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ள பொலிஸ் அலுவலர்களுக்கும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும், தேர்தல்கள் பணியகப் பொறுப்பு பொலிஸ் அலுவலர்களுக்கும், பொலிஸ் மா அதிபர் மற்றும் தேர்தல்விடயத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரினால் எழுத்து மூலமும், வாய்மொழி மூலமும் அறிவுறுத்துரை வழங்கப்பட்டுள்ளதோடு, தேர்தல்கள் திணைக்களத்தி­னாலும் இப்பொலிஸ் அலுவலர்களுக்கு எழுத்து மூலமும் வாய்மொழி மூலமும் அறிவுறுத்துரை வழங்கப்பட்டுள்ளது. 

தேர்தல் காலக்கெடுவினுள் தேர்தலோடு தொடர்புடைய பணிகளின்போது தேர்தல் சட்டங்களையும், உரிய ஏனைய சட்டங்களையும் மீறுதல் தொடர்பான முறைப்பாடுகள், அதனோடு தொடர்புடைய தகவல்கள் இருக்குமாயின் புகைப்படங்கள் சகிதம் அந்தந்த பிரதேச பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் மற்றும் வலயத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருக்கும் அறிவிப்ப­தற்கு நடவடிக்கையெடுக்க முடியும். அம்முறைபாடுகள் / அறிக்கைகள் என்பவற்றின் பிரதிகளைக் குறித்த மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கோ அல்லது இராஜகிரிய சரண மாவத்தையில் அமையப்பெற்றுள்ள தேர்தல்கள் செயலகத்திற்கோ அஞ்சல் மூலம் அனுப்ப முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :