ஆசிரியர்களின் இடமாற்றம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரிடம் கலந்துரையாடிய ஹரீஸ் MP



ஹாசிப் யாஸீன்,எஸ்.அஷ்ரப்கான்-


கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விக்கிரமவிற்கும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம் மற்றும் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் புஸ்பகுமார, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.நிஸாம், முன்னாள் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் யாக்கூப் ஆகியோரின் பங்குபற்றலுடன் அம்பாறை மாவட்த்தின் கல்வி அபிவிருத்தி சம்பந்தமான உயர்மட்டக் கூட்டம் இன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த உயர்மட்டக் கூட்டம் சம்பந்தாமாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்; கருத்தி தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களின் இடமாற்றம், பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, உயர்தர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர்களின் முறையற்ற இடமாற்றம் மற்றும் பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறை குறிப்பாக பொத்துவில் பிரதேசத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை என்பன பற்றி விரிவாக ஆராயப்பட்டது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு மாற்றீடின்றி இடமாற்றம் செய்யப்படுவதனால் மாவட்டத்தின் கல்வி நிலை கேள்விக் குறியாகியுள்ளது.

குறிப்பாக மாவட்டத்தின் உயர்தர வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கும் போது உரிய பாடசாலைக்கான மாற்றீடு ஆசிரியர்கள் வழங்கப்படாமையினால் முரண்பாடுகள் தோன்றியுள்ளதுடன் பாடசாலை மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமும் நானும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.

இதனையெடுத்து ஆளுநர் அம்பாறை மாவட்டத்தில் ஆசிரியர்கள் இடமாற்றத்தில் நிலவும் முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்கி உடன் தீர்த்து வைக்குமாறு மாகாண கல்வி உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

மேலும் அம்பாறை மாவட்டத்தின் கஷ்ட பிரதேச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, பௌதீக் வளப்பற்றாக்குறை என்பன பற்றியும் ஆராயப்பட்டது.

இதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்வதாக ஆளுநர் இதன்போது உறுதியளித்தாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :