இக்பால் அலி -
முஸ்லிம்ளுடைய விடிவுக்காய் அரசியல் முகவரியை இஸ்தாபித்து விட்டுச் சென்ற மறைந்தும் மறவாமல் வாழுகின்ற அமைச்சர் அஷ்ரப் அவர்களுடன் கைகுலுக்கிக் கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக உரமூட்டிய அப்துல் ஹை சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக கட்சியின் முக்கிய உயர் பிரதிநிதியாக நின்று கட்சியின் வளர்ச்சிக்கும் பல்வேறு சமூகப் பணிகளுக்கும் உறுதுணையாக இருந்துள்ளார்.
மறைந்த அமைச்சர் எம். எச்.எம் அஷ;ரப்பின் அரசியல் சிந்தனை புரட்சிக்கு ஏற்ப ஹை நீண்ட கால திட்டமிடலுடன் உணர்வு பூர்வமாக செயற்பட்டவர். அந்தவகையில் 1994 ஆம் ஆண்டு கப்பல்துறை புனர்வாழ்வு புணரமைப்பு அமைச்சர் மறைந்த அமைச்சர் அஷ;ரப் அவர்களுடைய செயலாளராக கடமையாற்றினார். 2000 ஆம் ஆண்டு கொழும்பு மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 32000 வாக்குகளைப் பெற்றார்.
விகிதாரசாரத் தேர்தல் முறையில் வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் சிறு தொகை வாக்கு எண்ணிக்கையினால் இவர் தெரிவு செய்யப்பட வில்லை. அமைச்சரின் மறைவுக்குப் பிற்பாடு 2000-2001 ஆம் ஆண்டு ஆரம்ப முதல் செயலாளராகக் கடமையாற்றினார். பின்னர் 2001 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை அமைச்சர் பஷPர் சேகு தாவூத் அவர்களுடைய செயலாளராகக் கடமையாற்றியுள்ளார். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது வேட்பாளராகப் போட்டியிட்டார். ஆனால் அவர் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட வில்லை. அதற்கு காரணம் ஒன்று. வேகமாக தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட வில்லை .அடுத்தது அப்போது வீதியில் இறங்கி தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பு வழங்கப்பட வில்லை எனக் கூறலாம் இவர் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நன்கு புலமைபெற்றவர்.
இவர் பல்வேறு சமூகப் பணிகளில் அதீத ஈடுபாடுடையவர் என்று பல்வேறு மட்டங்களில் தன்னுடைய காலை ஊன்றிப் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவர் இம் முறை மீண்டும் மேல் மாகாண சபைத் தேர்தலுக்காக ஸ்ரீ. மு. கா. கட்சி சார்பாகப் போட்டியிடவுள்ளார். இவர் எங்களுடைய முஸ்லிம் முரசு பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி.
செவ்வி : ஆத்தீக் அலி
நீங்கள் அரசியல் துறையில் நுழைவதற்கான காரணமென்ன ?
இலங்கையில் விடுதலைப் புலிகளின் பயங்கரமான செயற்பாடுகள் நடந்த கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் முஸ்லிம்கள் இந்தப் போரில் பல்வேறு கோணங்களில் நசுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுடைய தேசிய குரலாக மறைந்த எம். எச். எம். அஷ;ரப் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி என்ற ஊடாக அம்மக்ளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவும் அவர்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காவும் மிகப்பெறுமதிவாய்ந்த எமது சமூகத்திற்காக புதிய அரசியல் காலாசார மொன்றை உருவாக்கினார். இதன் மூலம் முஸ்லிம்களுடைய அரசியல் நாகரீகத்தையும், முஸ்லிம்களையுடைய விழுமியங்களையும், எண்ணப்பாடுகளையும் காப்புணர்வுடன் உறுதிப்பாட்டை எய்தும் வகையில் இந்நாட்டு அனைத்து முஸ்லிம்களையும் நெறிப்படுத்தும் தகைமையை இந்தக் கட்சியினூடாக ஏற்பட்டுத்தப்பட்டன.
இந்த வரலாற்றுப் பின்னணியில் முஸ்லிம் சமூகம் சொல்லொண்ணாத் துன்பங்கை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய இயத்தில் ஏற்பட்ட கீறல் ஊடாக இந்தக் கட்சியில் நானும் ஒரு ஆரம்ப கார்த்தாவாக அங்கம் பெறக்கிடைத்தமையையிட்டு என்னுடைய சமூக உணர்வின் வெளிப்பாடே என்று சொல்வதுற்கு இது போதுமானதாகும்.
கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரநிதிநித்துவம் பாதுகாக்கப்படுமா?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு நகரிலும் கொழும்பு மாவட்டத்திலும் நீண்ட நாட்களாக செல்வாக்குச் செலுத்தி வரும் மிக உன்னதமான கட்சியாகும்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகள் ஆகிய கட்சிளும் முஸ்லிம்களுடைய உணர்வுகளுக்கும் தேவைகளுக்கும் சாத்தியப்பாடாகவுள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்தின் வழிகாட்டலினூடாக இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். இது முஸ்லிம்களுடைய அரசியல் பிரதிநிதித்தவத்தை திட்டமிட்டு குறைப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு சூழ்ச்சி முறையாகும்.
இன அடக்கு முறையின் பயங்கரக் கோரமுகம் இப்போது இந்த தேர்தல் ஊடாக களமிறக்கப்பட்ட இந்தக் கட்சியினூடாக காட்டப்படுகிறது.
அட்ப, சொற்ப இலாபங்களுக்காக கொழும்பு மாவட்டத்திலுள்ள பிரநிதிகளை குறைப்பதற்காக எங்களுடைய சமூக நலத் துரோகிகள் சோரம் போகியுள்ளதையிட்டு கவலை கொள்ளத் தோன்றுகிறது.
இன்றைய தற்கால சூழலில் எமது அரசியல் கட்சிகளும், கல்வி மான்களும், முஸ்லிம் அரசியல் சிந்தனையாளர்களும், புத்திஜீவிகளும், முஸ்லிம் சமூகத்திற்காக சீரான சிந்தனையுடன் ஒரே போக்கை கொண்டிருக்க வேண்டி அவரசமான கால கட்டத்தில் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம்.
எங்களுக்கிடையே மனக்குரோதங்களையும் கசப்புணர்வுகளையும் மறந்து முஸ்லிம்களின் விடுதலைக்காகவும் அரசியல் ,சுய உரிமைக்களுக்காகவும் முஸ்லிம்களுடைய இருப்பிற்காகவும் ஒரே குரலில் நின்று குரல் கொடுக்க வேண்டும். அரச வழங்கும் சலுகைகளின் வகி பங்கை சரியான முறையில் பெற்றுக் கொள்ள முஸ்லிம்களுடைய பிரதிநிதித்துவம் அவசியம். அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களை களமிறக்கி முஸ்லிம் வேட்பாளர்களுக்கிடையே கடும் போட்டியை விளைவித்து முஸ்லிம் பிரநிதித்துவத்தை இல்லாமற் செய்யும் என்பதற்கே வழிகோலும் என்பதை சம்ந்தப்பட்டோர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன ?
என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட ரீதியாகவும் அரசியல் சலுகைகளின் ஊடாகவும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அதில் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுக் கூறலாம் எனக் கருதுகின்றேன்.
நான் தனிப்பட்ட ரீதியாக மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 30 இளைஞர்களுக்கு முச்சக்ர வண்டிகள் வழங்கியுள்ளேன். 75 மேற்கும் பட்ட குடும்பங்களுக்கு மின்சார வசதிகள் பெற்றுக் கொடுத்துள்ளேன். 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தண்ணீர் வசதிகள் பெற்றுக் கொடுத்துள்ளேன். ஒ;வ்வொரு தடவையும் ஆயிரத்திற்கும் அதிகமான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைத்தல்.
தொண்டர் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்குதல், மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கான வாழ்வாதார நிதியுதவிகள் செய்தல், திருணம். கத்னா வைபவங்களுக்கு உதவுதல், மாகாண சபை உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் பெருந்தொகையான தையல் இயந்திரம் பெற்றுக் கொடுத்தல் , ஒவ்வொரு முஸ்லிம் பாடசாலைகளுக்கும் கணனி இயந்திரங்கள் பெற்றுக் கொடுத்தல், விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் பெற்றுக் கொடுத்தல், அறநெறிப் பாடசாலை மற்றும் குர்ஆன் மத்ரஸாக்ளுக்கு கதிரைகள் பெற்றுக் கொடுத்தல், விளையாட்டுக் கழகங்களை உருவாக்கி அந்தச் சங்கங்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுக் கொடுத்தல் அல் ஹிக்மா பாடசாலைக்கு 87 இலட்சம் ரூபா செலவில் வகுப்பறைக் கட்டிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் , துவிச்சக்கர வண்டிகள் பெற்றுக் கொடுத்தல், அங்கவீனமுற்றவர்களுக்கு முச்சக்ர நாற்காலிகள் பெற்றுக் கொடுத்தல் எனப் பலதரப்பட்ட சேவைகளைச் செய்துள்ளேன்.
நான் எப்போதும் நேர்மையாகவும் உண்மையாகவும் அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் மற்றவர்களின் உணர்வுகளை மதித்து இந்தச் சேவைகளை என்னால் செய்ய முடிந்துள்ளது.
சமுதாய நோக்கில் பார்க்கின்ற போது தம் சமுகத்திற்கு செய்யும்; சமூகப் பணி மிக முக்கியமானதாகும்.
அந்த சமூகம் சகல நிலையிலும் வளம் பெற்றிருந்தால் தான் அந்த சமூகம் தலைநிமிர்ந்து வாழ முடியும். இதற்காக அரசாங்கம் எல்லா சமூகத்தினுடைய மேம்பாட்டுக்காக அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்கின்றன.
அரசாங்கத்தினுடைய வளப் பங்கீட்டைப் பெற்று அதனை முழுமையாக தம் சமூகத்திற்கு செலவு செய்ய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது மறைந்த தலைவரிடம் தலைசிறந்த தலைமைத்துவப் பண்பு, துணிவு, அர்ப்பணிப்பு ஆகிய விடயங்களை நேரில் கண்டவர் என்ற வகையில் அவரைப் பின்பற்றி 'பசி நோக்கார் கண் துஞ்சார். கருமமே கண்ணாயினார்' என்ற முதுமொழிக்கேற்ப என்னுடைய சமூகப் பணிகளை ஓரளவு திருப்திகரமாகச் செய்துள்ளேன் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.
நீங்கள் அரசியலில் வெற்றிபெற்றால் ஆற்றக் கூடிய பங்களிப்பு என்ன?
கொழும்பு மாவட்ட முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் கல்வி. பொருளாதாரம் என்ற ரீதியில் பின்தங்கியவாகளாகவும் இதனை கட்டியெழுப்ப சகலரும் அயாரது உழைக்க வேண்டும் என்ற தேவைப்பாடு இருந்து கொண்டிருக்கிறது. இதனால் கொழும்பு மாவட்ட மக்கள் பல்வேறு ரீதியாக ஏனைய மாவட்ட முஸ்லிம் மக்களைவிட பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர்.
இதனால் அவர்களுடைய வாழ்க்கைத் தரம் கட்டியெழுப்பப்பாடாமல் வெகுவாக அச்சுறுத்தலுக்கு உட்பட்டதாகப் புலப்படக் கூடியதாக இருக்கின்றது. அவர்கள் பரம்பரை வாழ்ந்த குடியிருப்பு இடங்களிலிருந்து அகற்றியமை தொட்டு இன்னும் அவர்கள் பரம்பரையாக வாழும் இடங்களிலிருந்து வெளியேற்றுவதற்கு பலவகையிலும் முஷ;தீபுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் பெருவாரியாக அன்றாடம் கொழும்பு வாழ் மக்கள் முச்சக்கர வண்டி ஒட்டுநர்களாகவும் சிறு வியாபாரிகளாகவும் நாட்டாமி வேலை புரிபவர்களாவும் உள்ளனர். பெரியளவு வியாபாரத்துறையில் முன்னெற்றம் காண முடியாத நிலையிலேயே கொழும்பு மாவட்ட முஸ்லிம் மக்கள் உள்ளனர்.
குறிப்பாக அவர்கள் வியாபாரத்துறையில் முன்னேற்றம் ஒன்றைக் காணும் பட்சத்தில் அதற்கெதிரான தடைகள் திட்டமிட்டுப் போடப்படுகின்றன. இதனால் அவர்கள் தொடர்ந்து வியாபார ரீதியான மேம்பாட்டை அடைவதற்கு அவர்களால் முடியவில்லை.
இம் மாவட்ட முஸ்லிம் மக்கள் ஏன் இவ்வகையான பின்னடைவுக்கும் சதித்திட்டங்களுக்கும் உட்பட்டிருக்கிற்னார் என்பது பற்றி நோக்குவது எம்முடைய கட்டாயத் தேவைப்பாடாகும்.
அத்துடன் கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் ஏன் இவ்வாறான பின்னடைவுக்கு உட்பட்டு மீள எழுந்து கொள்ள முடியாமை உள்ளார் என்ற கேள்விக்கு விடை காண முயல்வது காலத்தின் தேவையாகும். இதன் தாத்பரியத்தை விளங்கி கொண்டு இந்த கொழும்பு மாவட்ட முஸ்லிம் சமூகத்தைப் பற்றி நான் முழுமையாக அறிந்து வைத்திருக்கின்றேன்.
இம்மக்களுடைய சமூகத் தேவைகளை நிறைவேற்றி வைப்பதற்கு பலதரப்பட்டவர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். இதற்கு நம்பிக்கை கொண்ட கல்வி சமூகத்தை கட்டி எழுப்புதல் அவசியம். தான் வாழும் சூழலின் இருப்பு நிலையை அறிந்து கொள்ளவும் தெளிவு பெற்று மாற்றுத் திட்டங்களை வகுத்துச் செயற்படவும் கல்வி என்ற காரணியை முக்கியபடுத்தும் பட்சத்தில் எவ்வாறான முட்டுக் கட்டைகளையும் தாண்டி மேலெழுந்து வரமுயும். இதற்கு எமது கொழும்பு மாவட்ட முஸ்லிம் சமூகத்தை தயார்படுத்துவதற்கு பல திட்டங்கள் வகுத்துள்ளேன்.
நிச்சயம் நான் வெற்றி பெறும் பட்சத்தில் இத்தகைய செயற் திட்டங்களை தங்கு தடையின்றி முன்னெடுத்துச் சென்று கொழும்பு மாவட்டத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவேன். எனவே உங்களுடைய வாக்குகளை எனக்கும் வழங்கி என்னை மீண்டும் ஒரு தடைவ மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
0 comments :
Post a Comment