UNP சார்பாக மீண்டும் ஆறாவது தடவையாக போட்டியிட களமிறங்கும் யூசுப் ஹாஜியார்.

இக்பால் அலி-
கால் நூற்றாண்டு காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக அரசியல் துறையில் தடம்பித்து மீண்டும் ஆறாவது தடவையாக 2014 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக களமிறங்கியுள்ளர் யூசுப் ஹாஜியார்.

தாயின் தாய் மாமாவாகிய முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் பங்காற்றிய சேர் ராசிக் பரீத் அவர்களுடைய பேரன் என்கின்ற நெருக்கமான உறவு முறையைக் கொண்ட யூசுப் ஹாஜியார் அவரது அடிச் சுவட்டைப் பின்பற்றி அரசியலிலும் , சமூக சேவைப் பணிகளிலும் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியுள்ளார். 

இவரது தந்தை ஒரு கிராம உத்தியோகஸ்தராவர், இவரது 35 வருட சமூக சேவை எமது சமூகத்திற்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. யூசுப் அவர்களுடைய அரசியல் பிரவேசத்திற்கு இதுவொரு திருப்பமுனையாகவும் இருந்தன.

இவர் 1960 களில் மாணவப் பருவக் காலத்தில் மறைந்த அமைச்சர் பாக்கீர் மார்க்காருடன் இணைந்து சேவையாற்றியுள்ளார். 1979 ஆம் ஆண்டு பேருவளை நகர சபைத் தேர்தலுக்காகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு மீண்டும் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். 1988 ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முதலாக மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்ற போது அன்று நாட்டில் காணப்பட்ட பயங்கரவாத நிலை காரணமாக அந்த தேர்தலில் போட்டியிடுதற்கு வேட்பாளர்கள் பெரியளவு முன்வருவதில்லை.

இவர் தற்துணிவுடன் போட்டியிட் முதற்தடவையாக வெற்றியும் பெற்றார். அவர் அப்போது மேல் மாகாண சபையின் உணவு , கூட்டுறவு கைத் தொழில், சுற்றுலாத் துறை, கடற்றொழில் அமைச்சராக இருந்துள்ளார். அது மட்டுமல்ல சுமார் ஏழு தடவைகளுக்கு மேல் பதில் முதல் அமைச்சராக சேவையாற்றியுள்ளார். குறிப்பாகச் சொல்லப் போனால் நடைபெற்ற ஐந்து மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட்டு 25 வருடங்கள் தொடராக மாகாண சபை உறுப்பினராக சேவையாற்றியுள்ளார். இந்த அரசியல் சேவையைக் கருத்திற் கொண்டு சமீபத்தில் இவருக்காக பெரும் பாராட்டு விழா எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இந்தியா, மலேசியா, ஒவுஸ்ட்ரேலியா, வியட்நாம்,, பெங்கோக், எகிப்து போன்ற நாடுகளுக்கு விஜயம் மேற் கொண்டுள்ளார். இவர் இந்த மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக முஸ்லிம் முரசு பத்திரிகைக்கு வழங்கி செவ்வி.

நீங்கள் அரசியல் பிரவேசிப்பதற்கான முக்கிய நோக்கம் என்ன?

மூத்த அரசியல்வாதிகளின் கடந்த கால வாழ்வியல் வரலாற்றிலிருந்தும் அனுபவத்திலிருந்து பெற்ற பாடங்களே என்னுடைய இளமைக் காலத்தினுள் அரசியலில் நுழைவதற்கான தலைவாசலாகும். . அதுவே ஒரு நீண்ட கால அரசியல் வரலாற்றை மாகாண சபை அரசியல் துறையில் என்னால் தடம் பதிக்க முடிந்துள்ளது என்று குறிப்பிடலாம்.

சேர் ராசிக் பரீத் என்பவர் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு மாபெரும் செல்வாக்கை செலுத்திய மனிதர். அவர் தொடர்பாக அரசியல் ஞானம் என்னுடைய இளமைப் பருவத்திலும் இயல்பாகவே தோன்றின. என்னுடைய சமூக அரசியலை நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் ரி. பி. ஜாயா சேர் ராசிக் உள்ளிட்ட மூத்த அரசியல்வாதிகளின் வழியிலேயே முன்னோக்கி பயணித்தால் மாத்திரம் தான் நிச்சயம் ஒரு வெற்றி இலக்கை அடைய முடியும் என்ற மனப்பாங்கு என்னிடம் இயல்பாகவே இருந்தது. அந்தவகையில் அவர்ளுடைய சிறந்த பாதையைப் பின்பற்றியதன் காரணமாக கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஒரு அரசியல் வாதியாக இன்னும் தொடர்ந்து இருந்து கொண்டிருகின்றேன்.

என்னுடைய பணிக்காக தேர்தல் கால சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து என்னை வெற்றிபெறச் செய்வதற்கு என்னுடைய அபிமான மக்கள் எப்போதும் பின் நிற்பதில்லை. முஸ்லிம் மக்களுடைய உரிமைகள் மறுக்கப்படும் பட்சத்திலோ அல்லது முஸ்லிம்களுடைய தேவை எதுவெனக் கருத்திற் கொள்ளுகின்ற பட்சத்திலோ அதனை முழுமையாக அர்த்தப்படுத்தி புரிந்துணர்வுடன் மிகுந்த சமரசத்துடன் எதையும் சாத்தியப்பாடாக்கி வெற்றியாக்கிக் கொள்வேன்.

இம்முறை களுத்துறை மாவட்டத்தில் கூடுதலான முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் உங்களுடைய நீண்ட கால அரசியல் பிரநிதித்துவம் பாதுகாக்கப்படுமா?

நிச்சயம் பாதுகாக்கபடும். எனினும் முஸ்லிம்களுடைய வாக்குகள் சிதறடிக்கும் அபாய நிலையும் இருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் பாரிய அச்சுறுத்தல் முஸ்லிம் சமூகத்திற்கு இருந்து கொண்டிருக்கிறது. இவ்விரு கட்சிகள் மூலம் இன்று முஸ்லிம் சமூகத்திற்கு பல்வேறு வகையான நெருக்குவாரங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகத்திற்குரிய சமய, கலாசார விழுமியங்கள் கொச்சைப்படுத்தப்பட்டு முக்கியமாக எம்முடைய சமய விவகாரங்களில் உள்நுழைந்து எம்முடைய இருப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுக்கப்பட்டுள்ளன. இந்த அபாய இந்தக் கட்சிகளின் தலைவர்களால் ஏட்பட்டுள்ளன என்றுதான் கூற வேண்டும். இவர்களால் என்ன சாதிக்க முடிந்தது. வெறுமனே உணர்;ச்சிகராமான ஊடாக அறிக்கையை மாத்திரம் விடுத்த வண்ணம் மக்களை இன்னும் ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

தேசிய கட்சியின் மூலமாக அரசியல் பிரநிதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தருணத்தில் நாங்கள் இருக்கின்றோம். ஏனெனில் எங்களுக்கெதிராக தீய சக்திகள் பல்வேறு வகையான இன்னல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் முஸ்லிம் மக்களுடைய உணர்வுகளை வெறுமனனே உசுப்பேத்திவிட்டு வாக்குகளை சிதறடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் தேசிய கட்சிகளின் ஊடாகப் பெறப்படும் அரசியல் பிரதிநிதித்துவம் தக்க வைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்கின்ற சிந்தனைப் போக்கு முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியில் இருத்தல் வேண்டும் . இது தொடர்பாக பாரிய சிந்தனை விழிப்புணர்வூட்டல்கள் செய்யப்படல் வேண்டும்.

இன்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவரோ, அல்லது அமைச்சர் அதாவுல்லாவுடைய கட்சியோ அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரோ ஒரு துளி முஸ்லிம் சமூகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடிவில்லை. எதனையுமே சாதிக்க இவர்கள் இன்னுமின்னும் முஸ்லிம்களை உயிர்ப்பலிக் களத்திற்கு தள்ளுகின்ற சதித் திட்டங்களை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்தக் கட்சிக்காரர்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தங்களுடைய தனித்துவ அடையாளத்தை வைத்துக் கொள்வதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் கலந்து வாழும் பிரதேசங்களில் கூறுபோட்டு இனவாதவுணர்களைக் கக்கி பிளவுகளை ஏற்படுத்துகின்ற சதியினையே இந்த முஸ்லிம் கட்சிக்காரர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த கட்சியில் வேட்பாளர்களை நிறுத்துகின்ற போது முஸ்லிம்களுடைய சொற்ப தொகைவாக்குகள் அங்மிங்கும் பிரிந்து சென்று எங்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாமற் போய் விடும் என்பது இவர்களுக்கு விளங்க வில்லையா?

முஸ்லிம் சமூகத்தை பல்வேறு வழிகளில் மேம்படுத்த வேண்டிய தேவைப்பாடு இருந்து கொண்டிருக்கிறது. இதற்காக நாங்கள் நிறையத் திட்டமிட்டு செயற்பட வேண்டி இருக்கிறது. எங்கள் பிரதேசத்திலுள்ள மொத்த முஸ்லிம் வாக்காளர்களுடைய எண்ணிக்கையை வைத்து மதீப்பீடு செய்து வாக்குகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆனால் எங்களுடைய பிரதிநிதித்துவங்கை எங்களைப் போன்ற முஸ்லிம் கட்சிக்காரர்களாலே அவசரப்பட்டு பதவி மோகத்தால் எந்தவிதமான மதிப்பீடுமின்றி இல்லாமற் செய்யப்படும் காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக இம்முறை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுடைய பிரதிநிதித்துவத்தை இல்லாமற் செய்யவே களமிறங்கி இருக்கின்றன. இது ஒரு முஸ்லிம் சமூகத்திற்குச் செய்யும் வரலாற்று ரீதியிலான பெரும் துரோகத்தனமான செயலாகும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். ஆனால் இங்கு தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸை மக்கள் ஆதரிக்கப் போவதில்லை. அதனால் எந்தப் பயனும் இல்லை என இன்று மக்கள் உணர்ந்து வைத்துள்ளனர்.

சமூகத்தின் மீது அக்கறையற்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களே இன்றுள்ளனர். இவாகளால் எந்தப் பிரயோசமுமில்லை என்பதை களுத்துறை மாவட்ட முஸ்லிம் மக்கள் பெருமளவு விளங்கி வைத்துள்ளனர். எமது பிரதேசத்தில் சேர் ராசிக் பரீத் மற்றும் மறைந்து அமைச்சர் பாக்கீர் மார்க்கார் ,அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் உள்ளிட்டவர்கள் விட்டுச் சென்ற இடைவெளியை நிரப்ப ஒருவர் கூட இல்லாவிட்டாலும் அவர்களுடைய வாரிசாக நான் இன்னும் இருந்துக் கொண்டிருக்கின்றேன்.

எனவே களுத்துறை மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் சிந்தித்து வாக்களிக்க வேண்டியவாகளாக இருக்கின்றோம். இம்முறையும் என்னுடைய கட்சி சார்ந்த வாக்காளப் பெருமக்கள் நன்குணர்ந்து என்னை வெற்றிபெறச் செய்வார்கள் என்பது நிச்சயம்

முஸ்லிம்களுடைய கல்விக்காக உங்களுடைய பங்களிப்பு என்ன?

களுத்துறை மாட்டத்தைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் வியாபாரத்துறையில் அதிக அக்கறை காட்டுகின்ற படியால் கல்வித் துறையில் மிகுந்த உற்சாகமான நிலை காணப்பட வில்லை. ஆனால் மாகாண சபை ஊடாக கல்விக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் அதிகம். எனினும் அதனூடாக எமது முஸ்லிம் சமூகம் பெற்றுக்கொள்கின்ற பயன்கள் மிக மிக குறைவாக காணப்படுகின்றது. இருந்த போதிலும் நான் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் எமது மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் வளப் பற்றாக் குறையைக் கண்டறிந்து தேவையான கட்டிட வசதிகளையும், ஆசிரியர் நியமனங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளேன். நான்; மாகாண சபையில் அடிக்கடி முன்வைத்த கோரிக்கையின் பயனாக தமிழ் மொழிப் பாடசாலைக்கு 500 பட்டதாரிகள் ஆசிரியர்கள் நியமனங்கள் வழங்ககட்டன.

எங்களுடைய வியாபார முறைகள் எல்லாம் திட்டமிட்ட அடிப்படையில் முடக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இனிமேல் முஸ்லிம்களுடைய எதிர்காலம் கல்வியின் மூலமாகத்தான் கட்டியெழுப்பட வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இன்று முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் கல்வியினூடாகத் தான் வியாபாரத்தை சீர் படச் செய்ய முடியும் என்று சிந்திக்க முற்பட்டுள்ளனர். அரசானது இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஒரே கல்விக் கொள்கையினையே அறிமுகப்படுத்துகின்றது. 

வளங்களும் அவ்வாறே பகிர்ந்தளிக்கப்படுகின்றன. ஆனால் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களுடைய அடைவு மட்டம் மிகவும் குறைந்தளவு காணப்படுகின்றது. எனவே இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு கூடிய கவனம் செலுத்தி அதற்கான முன்னெடுப்புக்கள் பல மேற்கொண்டுள்ளேன். இந்த தொடர் பணிகளை மேற் கொள்ள என்னுடைய வெற்றி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கையாகும்.

நீங்கள் வெற்றி பெற்றால் உங்களுடைய எதிர்காலத் திட்டங்கள் என்ன?

முதலாம் ஆண்டுக்குப் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளுகின்ற விடயம் இன்று பெரும் சர்ச்சையாக் உள்ளது. இலவசக் கல்வியின் நோக்கம் மறைந்து போகின்றது. இந்த நிலையில் சர்வதேசப் பாடசாலைகள் அமோகமா உருவாகி விட்டன. எளிய மக்களின் பிள்ளைகள் எந்தப் பாடசாலைக்கு போவதென அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த திட்டத்தைத் திருத்தி அமைத்து எல்லாக் குழந்தைகளும் கல்வி பயிலக் கூடிய பாடசாலைகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.

பட்டதாரியற்ற இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்த நடடிக்கை எடுப்பேன், அவர்களுக்கு மூலப்பொருள், பணம், பயிற்சி என்பன வழங்கப்பட்டு சுயதொழிலை ஆரம்பிக்க மாகாண சபையிலுள்ள சலுகைகளைப் பெற்றுக் கொடுப்பேன்.

முன்பள்ளிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு காப்புறுதி வசதியினை ஏற்படுத்தி அதனைச் செயற்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.

கல்வித் துறையில் தொலைக் காட்சி ஊடகம் ஒன்றை ஏற்படுத்தி கல்விச் சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன், ஒவ்வொரு வீட்டிலும் இன்று தொலைக் காட்சி உள்ளன. இதன் மூலம் பெரியளவு ஒழுக்கச் சீர்கேடுகள் நாட்டில் குறையும் என்பதுடன் பெற்றோர்களுக்கு பெரும் மனநிம்மதி கிடைக்கும். அத்துடன் எளிய பிள்ளைகளும் கல்வியின் முன்னேற்றத்தைக் காண்பர்.

அத்துடன் களுத்துறை மாட்டத்தின் வளமான கல்வியின் தேவை இன்றியமையாததாகவே காணப்படுகின்றது. இந்தக் கல்வி களுத்துறை மாவட்ட முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கி ஏனைய சமூக மாணவர்களுடன் போட்டி போடக் கூடிய அளவு முன்னேற்றப் பாதைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டி இருக்கிறது.

முஸ்லிம் சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றக் கூடிய ஆசிரியர் குழாம்களைத் தெரிவு செய்து பாராட்டி அவர்களை கௌரவித்தல் போன்ற பல்வேறு செயற் திட்டங்களை முன்னேடுக்கவுள்ளேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :