12 வயது சிறுவனை மோதிவிட்டு அதிவேகமாக சென்ற கனரக வாகனம்

ந.குகதர்சன்-

ட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள சத்துருக்கொண்டானில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 12வயதுச் சிறுவன் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

உடனடியாக சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகதற்சமயம் அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

ஏறாவூர் ஐயங்கேணியைச் சேர்ந்த பிரகாஸ் மிதுஸன் என்பவரே படுகாயமடைந்தவராகும்.

சம்பவம் பற்றித் தெரியவருவதாவது!

இன்று ஏறாவூர் ஐயங்கேணியில் இருந்து மட்டக்களப்பு திருப்பெருந்துறையிலுள்ள கண்ணகை அம்மன் கோயில்உற்சவத்திற்காக சிறுவனை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு தந்தை பயணித்துள்ளார்.

திங்கட்கிழமை வீதி விபத்து இடம்பெற்ற சத்துருக்கொண்டானில் அதே இடத்தில் வைத்து வெள்ளை நிற கன ரக வாகனம் தனது சைக்கிளை மோதிவிட்டு அதிவேகமாகச் சென்றதாகவும் அவ்வேளையில் தனது மகன் வீதியில்விழுந்து பலமாக அடிபட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

இவ்வேளையில் துடிதுடித்த சிறுவனை மோட்டார் சைக்கிளில் வந்த இரு முஸ்லிம் வாலிபர்கள் துடிப்புடன்செயற்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாகவும் சிறுவனின் தந்தை பிரகாஷ்தெரிவித்தார்.

இதனிடையே சிறுவனை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற இளைஞர்களான ஏறாவூரைச் சேர்ந்த முஹம்மத்அப்துல் மாஜித், மற்றும் மர்சூக் முஹம்மத் இஷாக் ஆகியோர் இது பற்றிக் கூறும்போது!

தாங்கள் அவ்வழியால் செல்லும் போது காயம்பட்டு இரத்தம் சொட்டச் சொட்ட வீதியில் கிடந்து துடிதுடித்தசிறுவனைக் கண்டதாகவும், அவரை தமது மோட்டார் சைக்கிளில் அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றாகவும், செல்லும் வழியில் கார் ஒன்றை வழி மறித்து அதில் சிறுவனை வேகமாக வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததாகவும் தெரிவித்தனர்.

காரில் பயணம் செய்தவர் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா என பின்னர்தங்களுக்குத் தெரிய வந்ததாகவும் இளைஞர்கள் கூறினர்.

இதுபற்றி கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா அவர்கள் கூறும்போது!

‘மனதை நெகிழ வைக்கும் மனிதாபிமான உணர்வுகளுக்கு எந்தவொரு விடயமும் தடையாக இருக்காது’ என்றுகுறிப்பிட்டார்.

‘குறித்த சம்பவத்தில் தங்களது உயிரையும் துச்சமென மதித்து குறித்த இளைஞர்கள் துடிப்புடன் செயற்பட்ட விதம்உள்ளத்தை உருக்கும் விதத்தில் அமைந்திருந்தது’ என்று அவர் கூறினார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் மட்டக்களப்புப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பிட்ட கன்ரர்வாகனத்தைத் தேடி போக்குவரத்துப் பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :