அஷ்ரப் ஏ சமத்-
வடக்குஇ கிழக்குப் பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு மூன்று தசாப்த காலமாக நிலவி வந்த யுத்த மோதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. பல கோடி ரூபா மதிப்புமிக்க சொத்துக்களின் சேதங்களும் பாரியளவானதாகும். இதன் விளைவாக யுத்தத்தினை எதிர்கொண்ட மக்கள் தமது வாழ்க்கையை மீண்டும் புதிதாக ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்ததை அடுத்துஇ இவ்வனைத்து விடயங்கள் காரணமாகவும் இலங்கை அரசாங்கம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பது இவற்றில் மிகவும் முக்கியமானதொரு சவாலாகும். உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி வெளிநாடுகளின் உதவியுடன் யுத்தம் நிலவிய பிரதேசங்களில் வீடமைப்பு மற்றும் குடியிருப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டன. வடக்கின் வசந்தம்இ கிழக்கின் உதயம் போன்ற அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் ஊடாக இத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன. மகிந்த சிந்தனை எதிர்கால நோக்கிற்கு அமைய அமுல்படுத்தப்பட்ட ஜனசெவண தேசிய வீடமைப்பு வேலைத்திட்டமானதுஇ வீடமைப்பு அபிவிருத்தியின் ஊடாக இதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கியது.
'ஜனசெவண' இதுவரை இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட பெரும்பாலான வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் பல்வேறு அம்சங்களுக்கும் சமமானதாக உள்ள போதிலும்இ சமுதாயத்தின் சகல தரப்பினர்களினதும் வீடமைப்பு அபிவிருத்திக்கு ஒரேயமைப்பில் பங்களிப்புச் செய்வதன் மூலம் இந்த நிகழ்ச்சித்திட்டம் விசேடமான தன்மையைக் கொண்டுள்ளது. தெற்கில் வாழும் கிராமிய மற்றும் நகர்ப்புற மக்களுக்கான வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தல் மற்றும் தோட்டப்புறங்களில் வேலை செய்கின்ற மக்கள் வாழ்வதற்கு உகந்த வீடொன்றின் உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்கும் ஜனசெவண பங்களிப்புச் செய்துள்ளது. மேலும் யுத்தம் நிறைவடைந்ததை அடுத்து வடக்குஇ கிழக்கில் இடம்பெயர்ந்திருந்த மக்களின் வீடமைப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்கும் ஜனசெவண பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
யுத்தம் காரணமாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பல வீடுகள் முற்றாக சேதமடைந்தன. மேலும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை கட்டாயமாக புனரமைக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. ஜனசெவண தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டமானதுஇ இவ்வனைத்து வீடமைப்புத் தேவைகளையும் மிகவும் நல்ல முறையில் இனங்கண்டு வீட்டு உரிமையாளர்களினது ஒத்துழைப்பையும் பெற்று இத்திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் பண்டைய தொடர்மாடி வீடுகள் பல காணப்படுகின்றன. இவை நீண்ட காலமாக புனரமைக்கப்படாமை காரணமாக சுற்றாடல் மற்றும் சமூக பிரச்சினைகள் பல எழுந்துள்ளன. இவ்வனைத்து தொடர்மாடி வீடமைப்புக் கருத்திட்டங்களையும் அரசாங்க நிதிப் பங்களிப்புடன் வீட்டு உரிமையாளர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி புனரமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை ஜனசெவண ஊடாக அரசாங்கம் அமுல்படுத்துகின்றது.
இந்த நிகழ்ச்சித்திட்டமானதுஇ'நகமு புரவர' என்று அழைக்கப்படுகின்றது. கடந்த மூன்று வருட காலப்பகுதிக்குள் நகமு புரவர நிகழ்ச்சித்திட்டத்தின் பங்களிப்புடன் கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த பல தொடர்மாடி வீடமைப்புத்திட்டங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. 'குருநகர் வீடமைப்புக் கருத்திட்டத்தை' புனரமைப்பதன் ஊடாக வடக்கிற்கும் நகமு புரவர நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
அமைச்சர் கெளரவ விமல் வீரவன்ச அவர்கள் கடந்த ஆண்டு வட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டதை அடுத்துஇ யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் நகரத்தின் பிரதான தொடர்மாடி வீடமைப்புத் திட்டமொன்றான குருநகர் வீடமைப்புக் கருத்திட்டத்தை புனரமைக்க வேண்டியதன் அவசியத்தன்மை இனங்காணப்பட்டது. நகமு புரவர நிகழ்ச்சித்திட்டமானது வடக்கில் வீடமைப்பு அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதற்கான ஆரம்பமாக இது அமைந்துள்ளது.
160 வீட்டு அலகுகளைக் கொண்டுள்ள குருநகர் வீடமைப்புக் கருத்திட்டம் 1985 இல் நிர்மாணித்து முடிக்கப்பட்டது. வடக்கின் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்காக தமது பங்களிப்பை வழங்கி வருகின்ற மீனவர் குடும்பங்களுக்காக இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கடற்கரையோரமாக அமைந்துள்ள குருநகர் வீடமைப்புக் கருத்திட்டமானது யுத்த காலத்தில் அரசாங்கத்தின் இராணுவத்தினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையிலான மோதல் காரணமாக கடுமையாக சேதமடைந்துள்ளது.
இங்கு வாழ்ந்த மீனவர் சமுதாயத்தின் அன்றாட தொழிலின் பாதுகாப்பும் இந்த வீடமைப்புக் கருத்திட்டத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது.
எவ்வளவு கஷ்டங்கள்இ அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டியிருந்த போதிலும் இந்த வீடுகளின் உரிமையாளர்கள் இங்கிருந்து வெளியேறிச் செல்லாமை இதற்கான காரணமாகும்.
வட பிரதேசத்தில் யுத்தம் இடம்பெற்ற காலங்களில் அடிக்கடி சமாதான சூழல் ஏற்பட்ட போதெல்லாம்இ குருநகர் வீடமைப்புக் கருத்திட்டத்தை புனரமைக்க ஆட்சியாளர்கள் முயற்சித்த போதிலும்இ இதனை வெற்றிகரமாக்கிக் கொள்ள முடியவில்லை. அமைச்சர் விமல் வீரவன்ச அவர்களின் ஆலோசனையின் பேரில் நகமு புரவர நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குருநகர் வீடமைப்புக் கருத்திட்டத்தின் புனரமைப்புப் பணிகள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டன. முறையான ஆரம்பமும்இ நிர்ணயிக்கப்பட்டவாறு பூர்த்தி செய்வதும் அபிவிருத்தியின் வெற்றியாகும்.
ஒரு வருட காலப்பகுதிக்குள் இவ்வனைத்து வீடுகளினதும்இ நிர்மாணிப்புப் பணிகளை நிறைவு செய்ய வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச பணிப்புரை வழங்கியிருந்தார். இது சுலபமான ஒரு விடயமல்ல. இதன் காரணமாக இந்த வீடமைப்புத் திட்டத்தை புனரமைக்கும் பணிகள் சவாலாக இருந்தன.
உலகின் மிகப் பெரிய பயங்கரவாத யுத்தம் நிலவிய பிரதேசத்தில் கடுமையாக சேதமடைந்துள்ள குருநகர் வீடமைப்புக் கருத்திட்டத்தை பூரணமான வீடமைப்புக் கருத்திட்டமொன்றாக புனரமைப்பது உண்மையில் மிகவும் கடினமான நடவடிக்கையாகும்.
புதிய வீடமைப்புத் திட்டமொன்றை நிர்மாணிப்பதைவிடவும் இது கடினமானதாகும். வீடமைப்புத் திட்டத்தை அண்மித்ததாக மேற்கொள்ள வேண்டிய புதிய நிர்மாணிப்புக்கள் மற்றும் புனரமைக்க வேண்டிய பணிகளை சரியாகவும்இ குறிப்பாகவும் இனங்கண்டுஇ குறுகிய காலப்பகுதிக்குள் மேற்படி நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறான பாரியளவான நிர்மாணப் பணிகளுக்குத் தேவையான சேவைகள் மற்றும் வசதிகளைப் பெற்றுக் கொள்வதிலுள்ள அசெளகரியங்கள் காரணமாக இந்த நிர்மாணப் பணிகளுக்குத் தேவையான நிர்மாணிப்பாளர்களைப் பெற்றுக் கொள்வது சிக்கலானதாக இருந்தது.
இதன் காரணமாக அமைச்சர் விமல் வீரவன்ச அவர்களின் பணிப்புரையின் பேரில் இந்நாட்டில் நிர்மாணக் கைத்தொழில் துறையின்இ முன்னோடி அரச நிறுவனமான அரசாங்க பொறியில் கூட்டுத்தாபனம் இப்பணிகளுக்கு பங்களிப்பை வழங்கியது. இவ்விரு தரப்பினரினதும் கூட்டு முயற்சியில் குருநகர் வீடமைப்புக் கருத்திட்டம் புனரமைக்கப்பட்டதுடன்இ நகமு புரவர நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இதற்காக செலவிடப்பட்ட தொகை 100 மில்லியன் ரூபாவாகும்.
உருவாகியுள்ள சமாதான சூழலில் வட பகுதி மக்களின் வாழ்க்கையும் வழமைக்குத் திரும்பியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்காக பல்வேறு செயற்பாடுகளின் மூலம் வட பகுதி மக்கள் தமது பங்களிப்பைச் செய்து வருகின்றனர். அரசாங்க பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தியானதுஇ இதற்குத் தேவையான பலத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது. குருநகர் தொடர்மாடி வீடமைப்புக் கருத்திட்டத்தின் புனரமைப்புப் பணிகளும் இந்த அபிவிருத்திகளுக்கு அமைவாக நிறைவடைந்துள்ளன.
கொழும்பு நகரத்திற்கு வெளியே நகமு புரவர நிகழச்சித்திட்டத்தின் கீழ் இதுவரை காலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரியளவான தொடர்மாடி வீடமைப்புக் கருத்திட்டமாக குருநகர் தொடர்மாடி வீடமைப்புக் கருத்திட்டம் உள்ளது. பல்வேறு அசெளகரியங்களுக்கு மத்தியில் இவ்வாறான வீடமைப்புக் கருத்திட்டமொன்றைஅரசாங்க பங்களிப்புடன் அரசாங்க நிறுவனங்களின் பங்கேட்புடன் ஒரு வருடமேயான குறுங் காலப்பகுதிக்குள் நிர்மாணித்து முடிக்கக் கிடைத்தமையதானது இலங்கையின் வீடமைப்பு மற்றும் நிர்மாணிப்புத் துறைக்குக் கிடைத்த விசேடமான வெற்றியொன்றாகும்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கிய நிலையில் வாழ்ந்து வந்த குருநகர் மீனவ சமுதாயத்தினர்இ ஜனசெவண வீடமைப்பு அபிவிருத்திச் செயற்பாட்டின் பங்களிப்பின் ஊடாக இலங்கையில் வீடுகள் உரித்தான சமூகத்தில் ஒன்றிணைந்துள்ளனர். இதனையும் இந்நாட்டின் வீடமைப்பு அபிவிருத்தி வரலாற்றில் முக்கியத்துவமிக்கதொரு நிகழ்வாக குறிப்பிட முடியும்.
0 comments :
Post a Comment