152 இலங்கை தமிழ் அகதிகளுடன் சென்ற படகு நடுக்கடலில் தத்தளிப்பு


வுஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடிச் சென்ற 152 இலங்கை தமிழர்களை ஏற்றிச் சென்ற படகு, எண்ணெய்க் கசிவு காரணமாக கிறிஸ்மஸ் தீவிலிருந்து 250 கிலோ மீற்றர் தொலைவில் நடுக்கடலில் சிக்கி தத்தளிப்பதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கடந்த 13ஆம் திகதி, புதுச்சேரியிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி படகில் 32 பெண்கள், 37 குழந்தைகள் உள்பட 152 புறப்பட்டுள்ளனர்.

படகில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதால், அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவிலிருந்து சுமார் 250 கீலோ மீற்றர் தொலைவில் நடுக்கடலில் நின்றது.

இது தொடர்பாக அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு படகில் பயணித்த புகலிடக் கோரிக்கையாளர் கருத்து தெரிவிக்கையில்,

"இந்த படகில் தற்போது சிக்கி உள்ளவர்கள் அனைவருமே இலங்கை தமிழர்கள் ஆவோம். இந்தியாவில் வாழ முடியாததால், புதுச்சேரியிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு இந்த படகில் புறப்பட்டோம். ஆனால் தற்போது எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு கோளாறு ஆகி நடுக்கடலில் சிகியுள்ளோம்.

கடலில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பெரும் அலைகள் படகை தாக்குகின்றன. இங்கு சில மீன்பிடிப் படகுகள் இருப்பது போன்ற விளக்கு ஒலிகள் எங்களுக்கு தெரிகிறது, ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. எங்களை காப்பாற்ற யாரேனும் உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடல் எல்லைப்பகுதியில் சிக்கும் படகுகளை மீட்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கைகள் அனைத்து மேற்கொள்ளப்படும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் டோனி ஹாபட் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் கன்பெராவில், தஞ்சம் புகுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தஞ்சம் தேடி வருவோருக்கான கட்டுபாடுகளை அவுஸ்திரேலிய அரசு கடுமையானதாக மாற்றியுள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதிக்குப் பின்னர் விசா இல்லாமல் சட்டவிரோதமாக படகுகளில் செல்பவர்கள் யாரும் அவுஸ்திரேவியாவிற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
இவர்கள் நவுரு தீவிலோ அல்லது பப்புவா நியூ கினியாவிலுள்ள மனூஸ் தீவுகளிலோ அமைக்கப்பட்டுள்ள முகாம்களிலேயே தங்க வைக்கப்படுகின்றனர்.

கடந்த 6 மாதகங்களாக அவுஸ்திரேலிய கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற படகுகள் பல இந்தோனேசியாவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், இப்போது நடுக்கடலில் சிக்கியிருக்கும் படகு இந்தோனேசியாவில் இருந்து வராததால் அந்தப்படகு எங்கு கொண்டு செல்லப்படும் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

சமீப காலமாக, அவுஸ்திரேலியாவுக்கு இவ்வாறு பயணிக்கும் அகதிகள் நூற்றுக்கணக்கானோர் கடலில் சிக்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :