சாய்ந்தமருது வொலிவோரியன் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 200 வீடுகளின் பணிகள் முடிவு.




ஹாசிப் யாஸீன்-

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் சாய்ந்தமருது வொலிவோரியன் கிராமத்தில் பயனாளிகள் மூலம் நிர்மாணிக்கப்பட்ட 200 வீடுகளுக்கான நிர்மாணப் பணிகளை முடிவுறுத்தும் நிகழ்வு நேற்று (10) சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயளாலர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு நீல் டீ அல்விஸ் பிரதம அதிதியாகவும், கல்முனை பிரதேச செயலாளர் மொகான் விக்கிரமராட்ச்சி, அட்டாளைச்சேனை பிரதேச செயளாலர் ஐ.எம்.ஹனீபா, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனீபா, உலமா சபைத்தலைவர் சட்டத்தரணி என்.எம்.முஜிப், சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பின் தலைவர் டாக்டர் எம்.ஐ.ஜெமீல், மாவட்ட, பிரதேச செயலகத்தினதும், தேசிய வீடமைப்பு அதிகார சபையினதும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், ஊர் பிரமுகர்கள் உட்பட சுனாமி வீட்டுத்திட்ட பயனாளிகள் மற்றும் குழுவினரும் கலந்த கொண்டனர்.

இவ்வீட்டுத்திட்டத்தை அமைப்பதற்கு பெரிதும் உதவிய அம்பாறை மாட்ட அரசாங்க அதிபர் நீல் டீ அல்விஸ், சாய்ந்தமருது பிரதேச செயளாலர் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோர் 200 சுனாமி வீட்டுத்திட்ட பயனாளிகள் அமைப்பினரால் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

இத்திட்டத்திற்கு பொறுப்பாகவிருந்த கிராம சேவக நிருவாக உத்தியோகத்தர் எம்.நளீரும் கௌரவிக்கப்ட்டனர்.

இதன்போது சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசாரப் பிரிவினால் சாந்தம் அரையாண்டு சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.

இவ்வீட்டுத்திட்ட தொகுதிற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ரூபா 110 மில்லியன் செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :