வாழ்வின் எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் 200 பயனாளிகளுக்கு கால்நடைகள்

எஸ்.சிவகாந்தன்-

ஹிந்த சிந்தனை வாழ்வின் எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் ஏற்பாட்டில் பதுளை மாவட்டத்தின் பல்வேறு தோட்டங்களில் சுயதொழில் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு ஒவ்வொரு தோட்டங்களிலும் சுயதொழிலாளர்கள் பிராஜசக்தி நவசக்தி செயற்திதிட்டத்தினூடாக பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான கால்நடைகள்; வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் 28.06.2014ம் திகதி பதுளை தபால் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் 200 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு அமைச்சரினால் கால்நடை வளர்பதற்கான காசோலைகள் கையளிக்கப்பட்டன. 

இந் நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மாகாண விவசாய அமைச்சர் எம்.ராம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்கள், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :