பழுலுல்லாஹ் பர்ஹான்-
றமழான் மாதத்தில் ஒவ்வொருவரும் குர் ஆனோடும் , நபி வழியோடும் தொடர்புகளை அதிகரிக்க வேண்டுமென்பதற்காக காத்தான்குடி அல்-மனார் நிறுவனம்; 2014- றமழான் விஷேட அறிவியல் போட்டி ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது.
றமழான் விஷேட அறிவியல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவபர்களுக்கு பெறுமதிவாய்ந்த பரிசுகள் வழங்கி வைக்கப்படவுள்ளதாக அல் மனார் நிறுவனம் அறிவித்துள்ளது.
இவ் றமழான் விஷேட அறிவியல் போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் பின்வரும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.
இதில்-
1.வினாப்பத்திரங்களை எதிர்வரும் 01-07-2014 திகதி முதல் காத்தான்குடி அல் -மனார் அறவியற் கல்லூரியின் வரவேற்பு பீடத்தில் காலை 9 .மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும்.
2. அல் -மனார் உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள்,விரிவுரையாளர்கள்,நிருவாகிகள் தவிர ஆண்,பெண் இரு பாலாரும் இப் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
3. வினாப்பத்திரங்களுக்கு ரூபா 30 ரூபாய் அறவிடப்படும்.
4. வினாப்பத்திரத்தின் நிழற்பிரதி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
5.ஒருவர் ஒரு வினாப்பத்திரத்தை மாத்திரம் சமர்ப்பிக்க முடியும்.
6.வெற்றியீட்டுபவர்களுக்கு பெறுமதிவாய்ந்த பரிசிள்கள் புனித நோன்பு பெருநாளினையடுத்து வழங்கி வைக்கப்படும்.
அத்தோடு வினாப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளும் கால எல்லையாக 01-07-2014 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 15-07-2014 செவ்வாய்க்கிழமை வரை வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பு றமழான் விஷேட அறிவியல் போட்டி-2014 வினாப்பத்திரங்களை 26-07-2014 சனிக்கிழமைக்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும்.
போட்டி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு0652248165, 0777910209, 0776073245, 0718080156போன்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
இப் போட்டி தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு 27-06-2014 நேற்று வெள்ளிக்கிழமை அல்-மனார் நிறுவனத்தில் இடம்பெற்ற போது பிடிக்கப்பட்ட படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
0 comments :
Post a Comment