ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 25ஆவது பேராளர் மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 07, கிரீன் பார்த் இல் அமைந்துள்ள புதிய நகர மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும்.
அன்று மாலை வரை நடைபெறவுள்ள இம் மாநாட்டில் நாடெங்கிலும் இருந்து பெருந்திரளான பேராளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
கிராஅத்துடனும், தக்பீர் முழக்கத்துடனும், தேசிய கீதத்துடனும் ஆரம்பமாகும் இப் பேராளர் மாநாட்டின் முதலாம் அமர்வில் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காக துஆப் பிரார்த்தனையும் இடம் பெறும்.
முதலமர்வின் போது தொடர்ந்து செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி. ஹஸன் அலி ஆண்டறிக்கையை வாசிப்பார். அத்துடன், தேசிய பொருளாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். அஸ்லம் தமது ஆண்டறிக்கையை சமர்ப்பிப்பார். கட்சியின் தவிசாளர் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் அங்கு உரையாற்றுவார்.
யாப்பிற்கான திருத்தங்கள், பேராளர்களின் கருத்துரைகள், செயற்குழு பற்றிய அறிவித்தல் என்பனவும் இடம்பெறும்.
பிற்பகல் நடைபெறவுள்ள இரண்;டாவது அமர்வின் போது, புதிய உச்சபீட உறுப்பினர்கள் பற்றி அறிவிக்கப்படும். பைஅத் நிகழ்வை அடுத்து தலைவர் பிரதான உரையாற்றுவார்.
இதனை நேரடியாக எமது இம்போட் தொலைக்காட்சியுனூடாகவும் வானொலியுடாக கேட்கலாம்
0 comments :
Post a Comment