அளுத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் வாழும் மக்கள் தங்களிடமுள்ள சட்ட விரோத ஆயுதங்களை எதிர்வரும் 28 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் பொலிஸில் ஒப்படைக்குமாறு பொலிஸார் அறிவிப்புச் செய்துள்ளனர்.
இத்தினத்திற்குப் பிறகு ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டால் அதனை வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்க எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த வகையில், சட்டவிரோதமாக வைத்துள்ள துப்பாக்கிகள், பெற்ரோல் குண்டுகள், கூரிய ஆயுதங்கள் என்பனவற்றை ஒப்படைக்குமாறு அப்பிரதேச மக்கள் வேண்டப்பட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பு நேற்று ஒலிபெருக்கி மூலம் அப்பிரதேச மக்களுக்கு பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.DC
0 comments :
Post a Comment