ஓட்டமாவடி கோறளைப்பற்று பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகளது 39வது பொதுச் சபைக் கூட்டத்தில் கண்டனம் தீர்மானம்

த.நவோஜ்-

ளுத்கம, தர்ஹா நகர், பேருவளை ஆகிய பிரதேசங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு இடம்பெற்றுவரும் பேரினவாதிகளின் இனச்சுத்திகரிப்புத் தாக்குதல்களை கண்டித்து நடைபெற்ற ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகளது 39வது பொதுச் சபைக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் அளுத்கம, தர்ஹா நகர், பேருவளை உள்ளிட்ட பிரதேசங்கள் உட்பட இலங்கையின் அதிகமான பிரதேசங்களில் பள்ளிவாயல்கள் தாக்கப்படுதல், முஸ்லிம்களின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்குடன் வர்த்தக நிலையங்கள் தாக்கப்படுகின்றமை மற்றும் தீயிடப்படுகின்றமை போன்ற பேரினவாதிகளின் திட்டமிட்ட செயற்பாடுகள் குறித்த கண்டனப் பிரேரணையானது சபையில் சமர்ப்பிக்கப்பட்டு தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்களால் உரை நிகழ்த்தப்பட்டது.

இதன்போது இக்கண்டனப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய அனைத்து கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் தமது கண்டன உரையினையும் நிகழ்த்திருந்தனர்.

இவ்வாறான கண்டிக்கத்தக்க செயற்பாடுகள் பேரினவாத அமைப்பான பொதுபல சேனாவினால் திட்டமிட்டு மக்களுக்கெதிராக முடக்கி விடப்பட்டு வருகின்ற போதும், குற்றவாளிகள் தண்டிக்கப்படாமை மற்றும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சாதகமாகக் குற்றம் சுமத்துகின்றமையும் கண்டன உரைகளின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

சபையில் அனைத்து உறுப்பினர்களது ஏகமனதான தீர்மானத்துடன் நிறைவேற்றப்பட்ட மேற்படி கண்டனத் தீர்மானமானது, நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்கும் அனுப்பி வைத்தலென சபையில் ஏகமனதாகக் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :